நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாகவே சமூகத்தின் எந்த பிரச்சினைகள் குறித்தும் வாயைத் திறந்து எதுவும் பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் அது பெரும்பாலும் இடியாப்பச்சிக்கலிலேயே வந்து முடிகிறது.
ஆனாலும் அவரது மவுனம் குறித்து இணையதளங்களில் பலர் தொடர்ந்து மட்டமான கமெண்ட் அடித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக அரசின் டாஸ்மாக் திறப்பு குறித்தாவது அவர் வாயைத்திறந்திருக்கலாம் என்பதே அவரது ரசிகர்கள் உட்பட பலரது கருத்தாக இருக்கிறது. எனவே இன்றோ நாளையோ அவர் தனது போயஸ் கார்டன் வீட்டு வாசலில் அல்லது சற்று தள்ளி நடுத்தெருவில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி டாஸ்மாக் குறித்து குறிப்பாக ஆன்லைன் சேவை குறித்தாவது கருத்து சொல்லும்படி தமிழ் சமூகம் எதிர்பார்க்கிறது.ஏனெனில் அவர் ஒரு மூத்த குடிமகன் அல்லவா?