அரசு துறைகளையெல்லாம் தனியாருக்கு ஏன் கொடுக்கக்கூடாதுன்னு குதிக்கிற தேச பக்தர்களே.. கொஞ்சம் இங்கே வாங்க…
⭕உங்கள் வாதம்:- உங்களில் எத்தனை பேரு
தூர்தர்ஷன் டீவிய பாக்குறிங்க..?
சன் டீவி, விஜய் டீவியைத்தானே பாக்குறிங்க…??
✅உண்மை விளக்கம்:- அரசு பொதுத்துறை நிறுவனமான பொதிகை தொலைக்காட்சி எந்த வித முதலீடோ & அரசாங்க ஆதரவு இல்லமால் ஊசலாடி கொண்டு இருக்கும் போது, வெறும் 10லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தனியார் டீவி(சன்) நிறுவனத்திற்கு, அரசு இயந்திரம் முழுமையாக வேலை செய்து இன்று 42தொலைக்காட்சி சேனல்களோடு 50,000 கோடி ரூபாய் சாம்ராஜ்யமாக மாற்றியது மக்களா? எடுபுடி அதிகாரிகளா? தரகு அரசியல்வாதிகளா?
⭕உங்கள் வாதம்:- எத்தனை பேரோட குழந்தைகளை அரசு பள்ளி கல்லூரிகளிலே படிக்க வைக்கிறிங்க…?
தனியார் பள்ளி கல்லூரிகளை தேடித்தானே ஓடுகிறீர்கள்..??
✅உண்மை விளக்கம்:- முட்டு சந்தில் அமைந்துள்ள ஒரு சின்ன மெட்ரிகுலேஷன் பள்ளியில் உள்ள அடிப்படை கழிவறை வசதிகள் கூட நாட்டை கட்டி ஆளும் அரசு பள்ளிகளில் இல்லாமல் வைத்து இருப்பது யார் குற்றம்? பெற்றோரின் குற்றமா?
ஆண் குழந்தைகள் தெரு ஓரத்திலே நின்று கூட சிறுநீர் கழித்து விடுவர். பெண் குழந்தைகளின் நிலைமை என்ன??? அரசு பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளில் ஆறில் ஒருவருக்கு சிறுநீர் சம்பந்தமான நோய்கள் உள்ளது.
⭕உங்கள் வாதம்:- எத்தன பேரு லாங் டூர் போகும் போது அரசு பேருந்திலே பயணிக்கிறிங்க….?? தனியார் சொகுசுப்பேருந்தில் ஏசி வசதியோட பயணிக்கத்தானே ஆசப்படுறிங்க..???
✅உண்மை விளக்கம்:- தமிழகத்தில் ஓடும் அரசு பேருந்துகளில் 65சதவிகித பேருந்துகள் காலாவதியாகி பல வருடங்களாகி இருந்தும் இன்னும் மாற்றாமல் ஓட்டை வண்டியாகவே ஓட்டுவது அரசியல்வியாதிகளின் பினாமி தனியார் பேருந்து முதலாளிகள் கொழுக்க வேண்டும் என்பதால் தானே.
⭕உங்கள் வாதம்:- அரசு விற்கும் ஆவின் பால் இருந்தாலும், ஆரோக்யா பாலைத்தானே தேடி புடிச்சு வாங்குறிங்க…?
✅உண்மை விளக்கம்:- இங்கே மக்கள் யாரும் தனியார் பால் தான் வாங்க வேண்டும் என அடம்பிடிக்க வில்லை. தனியார் நிறுவன பால் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் போது, எப்போதும் அரசின் ஆவின் பால் உற்பத்தி மட்டும் அதிகரிக்கப்படாமல் எந்த கடைகளிலும் கேட்கும் நேரத்தில் கிடைக்காமல் இருப்பது அரசியல்வியாதிகளின் சூழ்ச்சியால் தானே???
⭕உங்கள் வாதம்:- ரேஷன் கடையில மளிகை பொருட்களை குறைந்த விலைக்கு விற்றாலும், அதி நவீன சூப்பர் மார்க்கெட்டை தேடித்தானே ஓடுகிறீர்கள்…??
✅உண்மை விளக்கம்:- வெறும் ரூ.50,000 முதலீட்டில் தொடங்கிய அண்ணாச்சி கடையில் கூட தரமான அரிசி, மளிகை பொருட்கள் கிடைக்கும் போது வருடத்திற்கு ரூ.10,000கோடி ருபாய் விற்றுமுதல் கொண்ட அரசு பொது விநியோக கடைகளில் புழு, வண்டுகள் நிறைந்த மனிதர்கள் சாப்பிட தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்வது அரசியல்வதிகளின் சூழ்ச்சி தானே?
⭕உங்கள் வாதம்:- தீபாவளிக்கோ பொங்கலுக்கோ…
புது துணி எடுக்க கோ-ஆப்_டெக்ஸ்க்கோ, காதி வஸ்திராலயத்துக்கோ-வா போவீர்கள்..??
சாரதாசுக்கோ, போத்தீசுக்கோதானே போவீர்கள்…??
✅உண்மை விளக்கம்:- நமது தெருவில் உள்ள சின்ன ஜவுளி கடைகளில் கூட தரமான உடைகள், நியாயமான விலையில் கிடைக்கும் போது அரசு
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் மட்டும் ஏன் தரமான ஆடைகளை சரிவர கொள்முதல் செய்வதில்லை. எப்போது கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் கேட்டாலும் பல பொருட்கள் இன்னும் வரவில்லை அடுத்த வாரம் வாருங்கள் என்பதே உண்மை நிலை. இதே கோ-ஆப்_டெக்ஸ் நிறுவனம் அன்பு அய்யா திரு.சகாயம் அவர்கள் தலைமை பொறுப்பில் இருந்த போது மிகுந்த லாபத்தில் சென்றது தனிக்கதை.
அரசாங்கத்தின் அத்தனை வியாபார நிறுவனங்களையும் வளர விடாமல் நசுக்கி விட்டு.
அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் தனியார் நிறுவனங்கள் வளர துஷ்ப்ரயோகம் செய்து விட்டு.
தற்போது ஊசலாடிக்கொண்டு இருக்கும் மிச்சம் மீதி அரசு நிறுவனங்களையும் தனியாருக்கு தாரைவார்க்க தாம் தூம்னு குதிக்கிறீங்களே?
அனைத்தும் தனியார் மயம் என்றால்?
இனி அரசின் வேலை என்ன?
தரகு(கமிஷன்) வாங்கி கொண்டு கையெழுத்து போடுவதா?
அதிமேதாவிகளே, ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
நாட்டிற்கு அழிவு காலம் வரும் போது நிறுவனங்கள் அரசின் வசம் இருக்கும் போது மட்டுமே அதன் விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடும், ரயில்கள் மருத்துவமனை களாக்கப்படும், அதிகாரிகள் அனைத்தும் மறந்து களப்பணி ஆற்றுவார்கள்.
ஏனென்றால் அரசு நிறுவனத்தின் நோக்கம் சேவை.
தனியார் நிறுவனங்களின் நோக்கம் தேவை.
அணைத்து அரசு நிறுவனங்களையும் திரு.சகாயம், திரு.இறையன்பு, திரு.ககன்தீப்சிங், திரு.உதயசந்திரன் இவர்களை போன்ற நேர்மையான அரசு அதிகாரிகள் கொண்டு மீட்டெடுப்போம்.
உண்மையான தற்சார்பை வளர்த்தெடுப்போம்.
ஏக்கத்துடன்
✍ – தனுவேல்ராஜ் முத்துக்காத்தன். தேசிய ஒருங்கிணைப்பாளர் – தேசிய நவீன நீர்வழிச்சாலை திட்டம் & தமிழக நீர்மேலாண்மை உயர்மட்ட திட்ட ஆலோசகர், தலைமை ஒருங்கிணைப்பாளர்- தேசிய சீர்திருத்த கட்சி (Non-Political Party).👨🏻💻