தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த கலைஞர், இயக்குநர் பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.
ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் தமிழ், மலையாளம் என பல்வேறு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் மகனும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் லெனினின் இளைய சகோதரரும் ஆவார். இவர் இயக்குநர் பாரதிராஜா உடன் இணைந்து பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 2001 இல் வெளியான கடல் பூக்கள் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சாந்தாரம் விருதினை வென்றார். அலைகள் ஓய்வதில்லை (1981), கண்களால் கைது செய் (2004) ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசு திரைப்பட விருதினை இருமுறை வென்றுள்ளார்.
இந்நிலையில் ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் உடல்நலகுறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்த செய்தியை அறிந்த திரைத்துறையை சேர்ந்த கலைஞர்கள் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த கண்ணனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் அமெரிக்காவில் இருப்பதால் அவர் வந்ததும் ஒளிப்பதிவாளர் கண்ணனின் இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தெரிகிறது.
ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் பணியாற்றிய திரைப்படங்கள் தொகுப்பு:-
1978 ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
1980 நிழல்கள்
1981 அலைகள் ஓய்வதில்லை
1981 டிக் டிக் டிக்
1982 காதல் ஓவியம்
1982 வாலிபமே வா வா
1983 மண்வாசனை
1984 புதுமைப் பெண்
1985 முதல் மரியாதை
1985 ஒரு கைதியின் டைரி
1986 கடலோரக் கவிதைகள்
1987 வேதம் புதிது
1988 கொடி பறக்குது
1988 சொல்லத் துடிக்குது மனசு
1988 சூரசம்ஹாரம்
1990 என் உயிர் தோழன்
1991 புது நெல்லு புது நாத்து
1992 நாடோடித் தென்றல்
1993 கேப்டன் மகள்
1993 கிழக்குச் சீமையிலே
1994 கருத்தம்மா
1994 பிரியங்கா
1995 பசும்பொன்
1996 சேனாதிபதி
2001 கடல் பூக்கள்
2003 லூட்டி
2003 கண்களால் கைது சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
2004 விஷ்வ துளசி
2005 ஆயுள் ரேகை
2008 பொம்மலாட்டம்
2011 உளியின் ஓசை
2011 உச்சிதனை முகர்ந்தால்:
போன்ற படங்கள் ஆகும்.