தற்போதைய கொரோனா காலத்தில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது. உண்மையில் அது எப்போதுமே எல்லோருக்கும் தேவையான ஒன்று.
நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள என்னவெல்லாம் சாப்பிடலாம் என பெரிய லிஸ்ட் போட்டு யோசிக்க வேண்டிய அவசியமேயில்லை.
பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முருங்கை கீரை கட்டு அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால் நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம்.
முருங்கையில் வைட்டமின் C ஆனது ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட 7மடங்கு அதிகமாக உள்ளது.
முருங்கையில் வைட்டமின் A ஆனது
கேரட் இல் உள்ளதை விட 4மடங்கு அதிகமாக உள்ளது.
முருங்கையில் வைட்டமின் B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதை விட 50மடங்கு அதிகமாக உள்ளது.
முருங்கையில் வைட்டமின் B3 ஆனது வேர்க்கடலை யில் உள்ளதை விட 50மடங்கு அதிகமாக உள்ளது.
முருங்கையில் கால்சியம் சத்து பாலில் உள்ளதை விட 4மடங்கு அதிகமாக உள்ளது.
முருங்கையில் புரோடீன்(புரத) சத்து பாலில் உள்ளதை விட 2மடங்கு அதிகமாக உள்ளது.
முருங்கையில் மெக்னேஷியம் சத்து முட்டையில் உள்ளதை விட 36மடங்கு அதிகமாக உள்ளது.
முருங்கையில் இரும்பு சத்து மற்ற கீரைகளில் உள்ளதை விட 25மடங்கு அதிகமாக உள்ளது.
முருங்கையில் பொட்டாசியம் சத்து வாழைப்பழத்தில் உள்ளதை விட 3மடங்கு அதிகமாக உள்ளது.
முருங்கையை வளர்க்க யாரும் அதிகம் சிரமப்படத் தேவையில்லை. அருகில் எங்கேனும் முருங்கை மரம இருந்தால், அந்த மரத்திலிருந்து ஒடிக்கப்பட்ட கைப்பருமன் அளவுள்ள நான்கடி அல்லது ஐந்தடிக் குச்சியை வெட்டியோ, உடைத்தோ வாங்கி வந்து, உங்கள் வீட்டில் உள்ள வெயில் படும் இடத்தில் குழி தோண்டி ஊன்றி வைத்துத் தண்ணீர் ஊற்றி வந்தால் போதும், அது சிறிது நாளில் தளிர்த்துவிடும். அப்பும் காலை நேரம் வாசல் தெளிக்கையில் சிறிது தண்ணீர அதற்கும் தெளித்து வாருங்கள். அம்புட்டுத்தான். உங்கள் வீட்டில் இடம் இல்லாவிட்டால் கூட ரோட்டோரம் உள்ள சிறு மண் பகுதியில் கூட ஊன்றி வளர்த்துவிடலாம். யாவருக்கும் பயன்படும்.
மிக எளிதாக வளர்க்கக்கூடிய, எந்தச் செலவும் இல்லாமல் பலன் தரக்கூடிய ஒரே மரம் முருங்கை மரமே…
அதனால்தான் மருத்துவ விஞ்ஞானத்தில் தலைசிறந்த கியூபாவில் இருந்து இங்கே வந்து, தமிழகம், கேரளப் பகுதிகளில் இருந்து முருங்கை மரத்தை அங்கே கொண்டு போய் இப்போது கியூபர்களின் மிக முக்கிய உணவாக முருங்கை திகழ்கிறது. கியூபர்கள் அதனை லத்தீன் அமெரிக்கா முழுக்கப் பரவ வகை செய்திருக்கிறார்கள். மக்களின் ஆரோக்கியத்தை எளிதில பேண இதைவிடச் சிறந்த உணவு உலகில் எதுவுமில்லை என்பது அவர்களது துணிபு. பிடல் காஸ்ட்ரோவின் அன்றாட உணவுகளில் முருங்கை சூப் முக்கியமானது.
முருங்கையின் அத்தனை உடல் பாகங்களும் மதிப்பு மிக்கவை. இலை, பூ, காய், தண்டு, பட்டை என எல்லாமுமே மனித குலத்துக்கு மகத்தான உணவாகவும் மருந்தாகவும் திகழ்பவை.
தொட்டிகளில் வைத்துச் செடி முருங்கைகளைக் கூட வளர்த்துக் கீரை, காய்களைப் பெறலாம்…
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்துப் பிரிவினரும் உண்ணக்கூடிய வகையிலான உணவு முருங்கையாகும். பாக்கியராஜ் படத்தில் போல மனித இணையர்களின் மகிழ்வுக்கும் முருங்கை மகத்தான தோழமையாகும்…
எனவே முருங்கை மரக் குச்சிகளை நட்டுவைத்து, இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியைப் பெறுங்கள். இநதக் கொரோனா எல்லாம் அப்போது ஓடிவிடும்.
-ஸ்ரீரசா