கொரோனாவுக்கு நிதிகேட்டு ஒரு மாதத்துக்கு முன்பு பிரதமர் தலைமையில் நான்கு மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற பிஎம் கேர்ஸ் என்கிற நிதி திரட்டலுக்கு பிரதமர் மோடி விளம்பரத்தில் தோன்றி எல்லா சேனல்களிலும் பேசினார். கொரோனாவுடனான போருக்கு நிதி தாருங்கள் என்று மக்களிடம் நெகிழ்ச்சியாக பேசினார். கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்க பிஎம் கேர்ஸ்க்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்டார்.
இதை நம்பி நாடு முழுவதும் இதுவரை சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை மக்கள் இந்த பிஎம் கேர்ஸ் (PM Cares) நிதிக்கு மக்கள் இதுவரை வழங்கிவிட்டனர். இப்போது அதன் கணக்கு வழக்குகள் பற்றி சில ஆர்வலர்கள் விசாரித்தபோது பிஎம் கேர்ஸ் என்பது அரசு நிதியமைப்பு அல்ல. அது ஒரு தனியார் நிதி அமைப்பு என்கிற பகீர்த் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரே தன் பெயரில் போலித் தனமான விளம்பரம் செய்து ஏமாற்று வேலை செய்யும் பிஎம் கேர்ஸ் நிதி பற்றி விளக்குகிறது இந்த காணொலி.