நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதாவுக்கு ஜூன் 27 ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. அவர் வயது 40.அவருக்கு நான்காவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் திருமணம் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் உணர்வுப் பூர்வமான செய்திக்குறிப்பில்……

நான் ஆம் என்று கூறினேன்…என் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களுக்குப் பிறகும் கூட காதலில் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் உண்மையாகவே நம்புகிறேன். நான் திருமணம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

இரண்டு பேர் ஒருவரை ஒருவர் நேசிக்கும்போது, அது ஒரு உறவின் ஆரம்பம். ஆனால் அவர்கள் திருமணம் செய்ய முடிவெடுக்கும் போது, அது அவர்களின் வாழ்க்கை ஒரு கொண்டாட்டமாகவும், அவர்களின் தீவிர அர்ப்பணிப்பு பற்றிய அறிவிப்பாகவும் இருக்கிறது.

நான் இந்த வருடம் 40 ஐ நெருங்குகிறேன். இந்த covid19 பாண்டெமிக், நீட்டிக்கப்பட்ட லாக்டவுன் என் வாழ்க்கையில் பல தெளிவுகளை அளித்து, எனது முன்னுரிமைகளை எனக்குக் கற்றுத்தந்தது.

இந்த 4 மாதங்கள் எனக்கு உணர்வுகள், ஏற்ற தாழ்வுகள், சிலிர்ப்புகள் & ஷிரில்ஸ் ஆகியவற்றின் ரோலர் கோஸ்டராக இருந்தது.

ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுடைய சரியான மனிதனைக் கண்டுபிடிக்கும் கனவு இருக்கிறது. என் கனவு நிஜமாகிறது.

பீட்டர் பால் ,அவர் என் கனவிலிருந்து என் வாழ்க்கைக்குள் வந்தார். எனக்குள்ளிருந்த வெற்றிடத்தை நிரப்பினார். ஆச்சரியமாக நான் அவரைச் சுற்றி பாதுகாப்பாகவும் முழுமையுடனும் உணர்ந்தேன்.

லாக்டவுன் போது என் யூடியூப் சேனலுக்கு தொழில்நுட்ப உதவியும் ஆதரவும் இல்லாமல் திண்டாடிய போது நண்பனாக அடியெடுத்து வைத்து உதவினார்.

நான், மிகவும் அமைதியாகவும், மன அழுத்தம் இல்லாமல் இருக்கவும் செய்தார்.

என் குழந்தைகள் எப்போதும் எனக்கு முன்னுரிமையாக இருந்திருக்கிறார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

அவரைத் திருமணம் செய்யும் முடிவுக்கு அவர்கள் சம்மதத்தை வேண்டினேன்.
என் குழந்தைகள் அங்கீகரிக்க வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன்.

அவர் அவர்களிடம் பேசியபோது அவர்கள் சம்மதம் என்று சொன்னார்கள்.

எனக்கு நடந்த சிறந்த விஷயம் இதுதான் என்று என் மகள் சொன்னபோது என் கண்களில் கண்ணீர் வந்தது. என் குழந்தைகளும் அவரை விரும்புகிறார்கள்.

தாயாக இருப்பது நான் கேட்டதோ சாதித்ததோ அல்ல. இது ஒரு நீண்ட தனிமையான வலிமிகுந்த போராட்டமாக இருந்தது. குறிப்பாக என் ′′ so called family ′′ இடமிருந்து எந்த உதவியும் ஆதரவும் இல்லாத போது “.

என்னைச்சுற்றியுள்ள அனைவரையும் மகிழ்விக்க நான் என் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன். ஒரு முறை நான் என் வாழ்க்கையை எனக்காக வாழவும், என்னை சந்தோஷப்படுத்தவும் முடிவு செய்துள்ளேன்.

என் கடினமான நேரங்களில் எனக்கு ஆதரவாகவும், என்னை ஊக்குவித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

பீட்டர் பால் யார் என்று கேட்பவர்களுக்கு?

அவர் தொழில் மூலம் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். என் இதயத்தைத் திருடிய, ஒரு எளிய, அக்கறையான, அன்பான நேர்மையான மனிதன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.