1970 களில் ஆண்ட கருணாநிதியின் அரசு மின்சார கட்டணத்தை யூனிட் 8 பைசாவிலிருந்து 10 பைசாவுக்கு உயர்த்தியது.
ஆதை எதிர்த்து கோவையில் விவசாயிகள் தலைவர் நாராயணசாமி தலைமையில் மாபெரும் போராட்டம் நட்த்தினார்கள்.
அதில் போலீஸ் வன்முறை செய்து மூன்று விவசாயிகளை சுட்டுக் கொன்றது. அதைத் தொடர்ந்து எழுந்த போராட்டங்களில் 63 விவசாயிகள் கருணாநிதி அரசால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இந்த போராட்டம் பற்றி அதில் இறந்த மாரப்பன் என்பவரது மகனிடம் இது பற்றி பேசுகிறார் கல்யாண சுந்தரம். வீடியோ இணைப்பு கீழே..
சரி. அதற்கு தலைப்பு ?
50 ஆண்டுகளை தொடுகிறது கருணாநிதி செய்த கொலை.
கருணாநிதி அரசு அந்தப் போராட்டத்தை நசுக்க போலீஸை ஏவி விட்ட மிருகத்தனம் பற்றி எந்த செய்திப் பத்திரிக்கையும் செய்தி போட்டதா ? தெரியவில்லை.
ஆனால் தற்போது இணையத்தில் தேடி கிடைக்கும் அனைத்து கட்டுரைகளும் கருணாநிதி அரசு என்பதைச் சொல்லாமல் மாநில அரசு , போலீஸ் அராஜகம் என்று உண்மையை மூடி மறைக்கின்றன. இது திராவிடம் செய்யும் அரசியலா?. பல வருடங்களுக்குப் பின் 1990ல் கருணாநிதியின் திமுக அரசு விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசம் என அறிவிக்கிறது.
இன்னொரு பக்கம் இந்த காணொலியின் முதல் நிமிடத்தில் மோடி அரசு மின்சாரத்தை தனியார் மயமாக்குவது பற்றி மோடி , பாஜக என்று பெயர் சொல்லாமல் மத்திய அரசு என்று சாப்டாக சொல்கிறார் கல்யாண சுந்தரம். இன்றைய தேதியில் மொத்தமாக அனைத்துக்கும் வேட்டு வைத்திருப்பது மின்சாரத்தை தனியாருக்கு முற்றிலும் விற்றுவிட்ட மோடி அரசின் அறிவிப்பு தான். அதை எதிர்த்துத் தானே ஒரு வீடியோ இன்னேரத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் ?
கலைஞக் கருணாநிதியை அப்படி வெளுத்து வாங்கும் கல்யாண சுந்தரம் எடப்பாடி அரசிடம் மட்டும் 70 துப்பாக்கிச் சூட்டில் இறந்து போன விவசாயிகளின் வாரிசுகளுக்கு அரசுப்பணி வேண்டும் என்று பணிவானவேண்டுகோள் வைக்கிறார். 1970க்குப் பின் திமுகவும், அதிமுகவும் பல முறை நாட்டை ஆண்டுவிட்டன.
மோடி அரசு மின்சாரத் துறையை முழுக்க தனியாரிடம் விற்பதைப் பற்றி ஒரு வரி கூட இந்த வீடியோ அலசவில்லை. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மோடியின் இந்த அறிவிப்பை எதிர்த்து கடுமையாக விமர்சிக்கிறார். ஆனால் நாதக போன்ற தமிழ்தேசிய கட்சிகள் இதை எதிர்த்து கடுமையாகப் பேசவில்லை. கண்டன அறிக்கைகள் கூட இல்லை.
நாதகவும் அதிமுக மற்றும் பாஜகவுக்கு சாப்ட் நிலைப்பாடு எடுக்கிறது என்பதைத் தானே இது காட்டுகிறது ?
இந்த வீடியோவில் நாதகவின் நேர்மையும் , திராவிட நேர்மையும் என இரண்டுமே இங்கு கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும் என்றே தோன்றுகிறது.
போலித் தனங்கள் எங்கிருந்தாலும் அவற்றை கேள்விக்குள்ளாக்குவோம்.