சமீப காலத்தில் சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் அதிகம் சிலாகிக்கப்பட்ட ‘ஐயப்பனும் கோஷியும்’பட இயக்குநர் சச்சி காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல மலையாள கதாசிரியரும் இயக்குனருமான சச்சி இருதய நோயால் பாதிக்கப்பட்டு ஜூன் 16 ஆம் தேதி திருச்சூர் ஜூபிலி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே ஒரு தனியார் மருத்துவமனையில் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்த சச்சி, சமீபத்தில் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டதால் திருச்சூர் ஜூபிலி மிஷன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. முக்கிய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சச்சி தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த செய்தி கேட்டதும் மலையாள திரை உலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
சச்சி திரைக்கதை எழுதுவதில் கைதேர்ந்தவர். அனார்கலி மற்றும் மிக சமீபத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியம் படங்களை இயக்கியிருந்தார். சச்சி முதலில் ஒரு திரைக்கதை எழுத்தாளராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். டிரைவிங் லைசென்ஸ், ரமலீலா, ரன் பேபி ரன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு சச்சி திரைக்கதை எழுதியிருந்தார். சேக்குடன் சாக்லேட், ராபின் ஹூட் மற்றும் சீனியர்ஸ் போன்ற படங்களில் இணை திரைக்கதை ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
அய்யப்பனும் கோஷியும் படம் மலையாள சினிமாவால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடபட்டது. இதன் முழு பெருமையும் சச்சியை மட்டுமே சாரும். திரைக்கதை அமைத்திருந்த விதம் அனைவரையும் வியக்க வைத்தது. தற்போது சச்சி உயிரிழந்ததை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Meera Kathiravan…முகநூலில்…
சச்சி.. உன்னுடன் சேர்ந்து வரவிருக்கும் எத்தனையோ நல்ல படங்களும் செத்துவிட்டன..:(
எல்லா வீடுகளின் முற்றங்களிலிருந்தும் கண்ணுக்குப் புலப்படாத பாதையொன்று மயானக்குழி நோக்கிச் செல்கிறது என்பதை மறுப்பதற்கில்லை..ஆனால் அந்த வழி இத்தனை சுருங்கியதாக இருந்திருக்க வேண்டாம்..நிலையற்ற வாழ்வு.
சென்று வா..
Sachy, Director of Ayyappanum koshiyum & Script writer of Driving license
#Ripsachy