எனக்கு குடிக்கற பழக்கம் கெடையாது.

ஆனாலும் அன்று நண்பனின் Bachelor பார்ட்டி …..தொந்தரவு பண்ணி கொஞ்சம் குடிக்க வைத்துவிட்டார்கள்.

எப்படி வீட்டுக்கு வந்தேன் , எப்படி என் படுக்கையில் படுத்து தூங்கினேன் எதுவுமே ஞாபகம் இல்லை.

காலையில் எழுந்ததும் என் படுக்கையின் அருகில் Flask ல சூடான காபி மற்றும் ஒரு தலைவலி மாத்திரை . பக்கத்துல ஒரு சின்ன பேப்பர் ….
“நான் பக்கத்து சூப்பர் மார்க்கெட்டிற்கு போயிருக்கேன் . டேபிள் மேல டிபன் ஹாட் boxla சூடா இருக்கு – பசிச்சா சாப்பிடுங்க – ஐ லவ் யூ ” என்று என் மனைவி எழுதி வைத்திருந்தாள் .

குழப்பமாக எழுந்து வெளியே வந்தேன். என் மகன் டேபிள்ல உக்காந்து சாப்டுகிட்டு இருந்தான் .

” ராத்திரி என்னடா நடந்துது “?

“அப்பா நீங்க ஓவரா குடிச்சுட்டு வந்து வீடு பூரா வாந்தி எடுத்தீங்க . அம்மா தான் எல்லாத்தயும் கழுவி விட்டு உங்களை படுக்க வெச்சாங்க”

” சரி அப்புறம் எப்படி கார்த்தால என்னை திட்டாம கொள்ளாம இவ்ளோ உபசாரம் – சூடா காபி , மாத்திரை , டிபன்.. எப்படிடா ?”

“ஓ அதுவா அப்பா . உங்கள தூங்க வைக்கறதுக்கு முன்னாடி அம்மா வாந்தி எடுத்து நனைஞ்சு போன உங்க பான்ட்டை கழட்ட முயற்சி பண்ணாங்க . அப்போ நீங்க ” என்னை விட்டுரு எனக்கு கல்யாணமாயிடிச்சு ன்னு கத்தினீங்க !! அதுதான் விஷயம்.”

😍😍😍😍
– வாட்ஸப் வம்பு.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.