பதினோறாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் வெவ்வேறு வகையான பாடப்பிரிவுகள் இருப்பதையும் அதில் தன் எதிர்காலம் எந்தப் பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பதில் உள்ளது என்பதையும் பற்றிய தெளிவான புரிதல் உள்ளவர்களாக இருப்பது மிக மிக அரிது.
இந்த விழிப்புணர்வற்ற வயதிலேயே நீ குறிப்பிட்ட துறையைச் சேர்ந்த பாடப்பிரிவை மட்டும் எடுத்து அதை மட்டும் தான் படிக்க வேண்டும். வேறு பிரிவுகளை படிக்கத் தேவையில்லை என்று மாணவன் மேல் அக்கறையுள்ளது போல அவர்களின் எதிர்காலத்தில் வெவ்வேறு விதமான வாய்ப்புக்களிலிருந்து அவர்களை குறுக்கி வைப்பதே தமிழக அரசு போட்டுள்ள ப்ள்ஸ் டூ பாடப்பிரிவுகளுக்கான புதிய சட்டம்.
இந்தச் சட்டத்தின் மூலம் பல மாணவர்களை தொடர்ந்து மேலே படிக்க விடாமல் செய்துவிட முடியும். இத்தகைய நயவஞ்சக சட்டம் பற்றி விளக்குகிறது இந்தக் காணொலி.