தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் சிகிச்சையில் இருக்கின்றனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சரும் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு சென்னையில் ஆரம்பித்துள்ளதால் இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது
இந்த நிலையில் பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் கூட கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான், பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ சதன் பிரபாகரன், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு ஆகியோர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான பா.வளர்மதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பா.வளர்மதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.