ஒரு இந்து முதியவரின் கேள்வி..?
நீங்கள்.. பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள், உண்மையான இந்துவே இல்லை ,என நேரிலும், சமூக வலை தளங்களிலும்,
மிகவும் கீழ்தரமாக விமர்சிக்கிறீர்கள்..!!
நாங்கள் இந்து இல்லை என்பதை, ஹிந்து விரோதி என்பதை
எதை வைத்து நீங்கள் அளவீடு செய்கிறீர்கள்.?
பாஜக சொல்லித்தான் நாங்கள் கடவுளை வணங்குகிறோமா..?
RSS காரர்கள் சொல்லித்தான் கோவிலுக்கு செல்கிறோமா…. இல்லை…!
பெரியார் சொன்னதற்காக கடவுளை
வணங்குவதை நிறுத்திவிட்டோமா..
இல்லையே..?
ஒட்டுமொத்த தமிழக மக்கள் தொகையில் கடவுள் மறுப்பாளர்கள் 0.5 சதவீதம் கூட இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை..
“எப்போதும் மிக சரியானதையே,
தேர்தெடுப்பவர்கள் நாங்கள்.!!”
ஒட்டுமொத்த இந்துக்களை,
உங்களுக்கு “பத்திரம்” போட்டு யாரும் எழுதி கொடுத்தார்களா..??
நீங்கள் வருவதற்கு முன்,நாங்கள் என்ன காட்டுமிராண்டி போன்றோ அல்லது நிர்கதியாகவா இருந்தோம்..??
பாஜக என்பது வெறும்
அரசியல் கட்சி மட்டுமே..!!
மோடிக்கு பெருவாரியான வாக்குகள் அளித்து 2014ல் பிரதமர் ஆக்கியது நாடு நல்ல வளர்ச்சியும் வளமும் பெற நல்ல திட்டங்கள் செயல்படுத்துவார் என்று தானே தவிர, “ஆபத்தில் இருக்கும் ஹிந்து மதத்தை மோடி காப்பாற்றி விடுவார்” என்பதற்காக அல்ல..
அப்படி ஹிந்து மதம் எந்த வகையான ஆபத்திலும் இல்லை என்று இங்கு உள்ள குழந்தைக்கு கூட தெரியும்..
முடிந்தால் மக்களுக்கு நன்மை செய்து
மக்கள் மனங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள்..!!
பாராட்டுகிறோம்…!
வாழ்த்துகிறோம்…!
மாற்று மதத்தை சேர்ந்தவர்களே உங்களை ஆதரிப்பார்கள்..
அதை விட்டு விட்டு பாஜகவை ஆதரிக்கவில்லை, என்கிற ஒரே காரணத்திற்காக,
என் இந்து மக்களை,
சூடுசொரனை இருக்கிறதா….?
சோற்றில் உப்புபோட்டு தின்கிறீர்களா”.?
என சந்தேகக்கிறீர்கள்??
நாங்கள் உப்புபோட்டு உண்பதை,
நேற்று வந்த வடமாநில கட்சியான உங்களிடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை..
இதுதான் உங்கள் அரசியலா..?
இவ்வளவுதான் உங்கள்நாகரீகமா.?
அப்படியெனில்…!
எங்கள் வாக்கு
உங்களுக்கு நிச்சயமாக
இல்லை..!
நீங்கள் எப்போதும் போலவே,
நோட்டாவுக்கு கீழேதான்..!
க.பிரியாராம்.