இந்து நாளிதழில் வெளியான ஹாசினி தேஷ்பாண்டே, ராஜேஷ் ராமச்சந்திரன் ஆகியோர் எழுதிய கட்டுரையிலுள்ள விஷயங்களைப் பற்றி ஜெயரஞ்சன் இக்காணொலியில் பேசுகிறார்.
கொரோனா காலத்தில் நடந்த ஊரடங்கு மற்றும் பொருளாதார இழப்புக்கள் எல்லா மக்களையும் ஒரே ரீதியாக பாதிக்கவில்லை. அவர்களை அம்மக்களின் சமூக வாழ்நிலை அடுக்கு நிலையைப் பொறுத்தே பாதிக்கிறது என்பதை விவாதிக்கிறது இந்த உரை.
‘Greate Leveler’ என்கிற கருத்தாக்கமும் கொரோனா விஷயத்தில் பொய்யாகியிருப்பதை அவர் விவரிக்கிறார். கொரோனா நோயின் பாதிப்பு, அடித்தட்டு, கீழ்ச்சாதி மக்களை மிகப் பெரும் அளவில் பாதித்திருக்கிறது. அதிலிருந்து தட்டுநிலை மேலே உயர உயர பாதிக்கும் அளவு குறைந்தபடியே வந்து உயர்தட்டில் , மேல்சாதியில் இருப்பவர்கள் முற்றிலும் பாதிக்கப்படவில்லை.