பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் இருக்கும் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் மரணத்தில் நடிகை ரியாவுக்கு சம்பந்தம் இருப்பது போல சுஷாந்த் சிங்கின் தந்தை சந்தேகம் கிளப்பவே சுஷாந்தின் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தால் அவரின் கண்கள் பிதுங்கியிருக்கும், நாக்கு வெளியே தள்ளியிருக்கும், வாயில் நுரை வந்திருக்கும். ஆனால் அவருக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. சுஷாந்த் தூக்கு போட்டதற்கான அடையாளம் அவர் கழுத்தில் இல்லை. மேலும் சுஷாந்த் தூக்கில் தொங்கியதை யாரும் பார்க்கவில்லை. எனவே யாரோ சுஷாந்தை திட்டமிட்டு கொலை செய்துவிட்டனர் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறி வருகிறார். சுஷாந்தின் மரணம் கொலை என்று தான் நினைப்பதற்கான காரணங்களை பட்டியலிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்டார் சாமி. சுஷாந்தின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு சுப்பிரமணியன் சாமி கடிதமும் இவர் எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் இருக்கும் மருத்துவர் ராஜு வாத்வா தான் சுஷாந்த்தின் மரணத்தில் மருத்துவ ரீதியான சந்தேகங்களே மசமூக வலைதளத்தில் முதலில் தெரிவித்தார். சுஷாந்தின் கழுத்தின் இடப்பக்கம் ஸ்டன் கன் மார்க் இருந்தது. ஸ்டன் கன் என்பது வெளிநாடுகளில் போலீசார் குற்றவாளிகளைப் பிடிக்கும் போது அவர்களை நகரமுடியாமல் செயலிழக்கச் செய்ய கழுத்தில் கரண்ட் ஷாக் அடிக்கும் ஸ்டன் கன்னை வைத்து கரண்ட்டை பாய்ச்சி விடுவார்கள். குற்றவாளி செயலிழந்து கீழே கிடப்பார். பின்னர் மெதுவாக கைது செய்வார்கள். இதே முறையை பல கொலையாளிகளும் பின்பற்றி ஸ்டன் கன்னை வைத்து ஒருவரை செயலிழக்கச் செய்து பின் கொலை செய்த நிகழ்வுகள் அமெரிக்காவில் நடைபெற்றன. அதே போன்ற முறையில் சுஷாந்த் கொலை செய்யப்பட்டார், என்று ராஜூ வாத்வா கூறினார்..
சுஷாந்துக்கு நீதி கேட்டு அவரின் ரசிகர்கள் தினமும் ஒரு ஹேஷ்டேகை உருவாக்கி அதை ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாக விடுகிறார்கள். இந்நிலையில் மும்பை போலீசார் சுஷாந்தின் 12 டைரிகளை பறிமுதல் செய்துள்ளனர். அந்த டைரிகளில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சுஷாந்தின் பணத்தில் ரியா சக்ரபர்த்தியும், அவரின் குடும்பத்தாரும் சொத்து வாங்கியதாக கூறப்பட்ட நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுஷாந்தின் காதலியான பாலிவுட் நடிகை ரியா சக்ரபர்த்தி, அவரின் தந்தை, சகோதரர் ஆகியோரின் செல்போன்கள், லேப்டாப்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.
தன் மகனை தங்களிடம் இருந்து பிரித்து அவரை தற்கொலைக்கு தூண்டியதே ரியா தான் என்று சுஷாந்தின் தந்தை கிருஷ்ண குமார் சிங் போலீசாரிடம் தெரிவித்தார். ரியா சுஷாந்துக்கு ஏதேதோ மருந்துகள் கொடுத்ததாக அவரின் வீட்டில் வேலை செய்தவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ரியா மறுத்துள்ளார்.
சுஷாந்த்தின் மரணத்தில் சந்தேக நிழல்கள் இருக்கும் அதே வேளையில் , அதைப் பயன்படுத்தி அரசின் கொரோனா தோல்விகளை, செயல்படாத தன்மையை திசைதிருப்ப வட இந்தியாவில் சுஷாந்த்தின் மரணத்தை பாஜக அரசு பயன்படுத்துவதாக நாம் சந்தேகிக்கவும் வேண்டியிருக்கிறது.