ஒரு நிகழ்வு, ஆபத்து, பேரழிவு இப்படி ஏதாவது நடந்தா அதற்கு நாம என்ன செய்யறதுன்னு ஒரு முன்னோட்டமா யோசிக்கறதும், அது போல சூழலை போலியாக உருவாக்கிப் பார்ப்பதும்( Simulation) விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் தொடர்ந்து செய்து வரும் விஷயம் . ஒரு குழு அமைத்து இதுபோல ஒரு விஷயத்தை மையமாக கொண்டு விவாதிப்பாங்க
அது போல நடந்த ஒரு கூட்டம் தான் Event – 201. அமெரிக்காவில் கடந்த 2019 , அக்டோபர் மாதம் நியூயார்க்கில் நடந்தது இந்த ஈவன்ட் – 201 கூட்டம். அதில் கொரோனா போல ஒரு பெரும் நோய் உலகெங்கும் பரவினால் என்னவாகும்; அதன் பாதிப்புகள் என்னவாகும்; பொருளாதாரம் என்னவாகும்; எவ்வளவு மக்கள் சாவார்கள்; என்று போலியாகச் செய்து பார்த்தார்கள். அதில் ஆறுகோடிப் பேர் இறந்து போனதாக முடிவுகள் வந்தன.
பின்பு இந்த மார்ச்சில் உண்மையாகவே கொரோனா உலகம் முழுவதும் பரவியது. இது வரை 2 கோடிப் பேரை தாக்கியுள்ள கொரோனாவிற்கு 2லட்சத்து 60 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
இந்த விடயங்கள் தற்செயலானவையா அல்லது உலக கார்ப்பரேட்டுகளின் பெரும் திட்டமாக இருக்கலாமோ என்கிற சூழ்ச்சிக் கோட்பாட்டை பற்றிப் பேசுகிறார் தங்கப் பாண்டியன் சேகர். கீழுள்ள காணொலியில் Event 201 பற்றி அவர் மேலும் விளக்குகிறார்.
https://www.centerforhealthsecurity.org/event201/about – Event 201 நிகழ்வு பற்றிய விவரம் இந்த லிங்க்கில் உள்ளது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் செப்டம்பர் 9 – 11 மாதிரி ஒரு பெரும் தாக்குதல் நடந்தா எப்படி இருக்கும்னு முன்பு ஒரு முன்னோட்டம், ஒத்திகை பாத்தாங்க. பின்பு அது நிஜமாகவே நடந்தது.
One world – One Rule – One Economic System. என்கிற கருத்தாக்கம் One India – One XXX .
இதைத் தொடர்ந்து பில்கேட்ஸ் – கொரோனா – டிஜிட்டல் ஐடி பற்றி மேலும் தனது சூழ்ச்சிக் கோட்பாட்டை விவரிக்கிறார் தங்க பாண்டியன்.
கொரோனா பற்றிய அந்த கோட்பாட்டைக் காண கீழே, இந்தக் காணொலியையும் பாருங்கள்.