அம்பானி இந்தியாவை திருடும் கதை (Part – 1) 🐊
_அம்பானி எவ்வளவு கொள்ளையடித்தாலும், என்ன தில்லுமுல்லு செய்தாலும் எதுவும் நமக்கு தெரிவதில்லை. 2G என்ற ஊழல் வழக்கு மட்டும் நாடெங்கும் தொடர்ந்து விவாதிக்கபடுகிறதே.. அம்பானி மோடியின் உதவியுடன் செய்யும் ஊழல்களை யாரும் பெரிதாக பேசவில்லை. ஏன்?
Reliance உருவாக்கிய Network 18 என்ற நிறுவனம் தான் இந்தியாவில் பெரும்பாலான டிவி மற்றும் மீடியா சேனல்களின் உரிமையாளர். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ என்ன செய்தி உங்களை வந்தடைகிறது என்பதை முழுமையாக கட்டுப்படுத்துகிறார் முகேஷ் அம்பானி
அது கிடக்கட்டும்.
நாம் முதலில் இருந்து ஆரம்பிபோம்
2012 குஜராத் முதல்வராக இருந்த போது மோடி தனது corporate நண்பர்களான Reliance ம் அதானி குழுமமும் 1500 கோடி லாபம் பெறும் வகையில் நிதி ஆதாரங்களை தவறாக கையாண்டுள்ளார். இதை கண்டுபிடித்து அப்போதே சொன்னார் மத்திய அரசின் முதன்மை தணிக்கையாளர் CAG. யாரும் கண்டுகொள்ளவில்லை
குஜராத் அரசின் pertroleum corporation (GSPC) 2009 ஆண்டிலிருந்து முறையாக இயங்கவில்லை. இது அதானி, எஸ்ஸார், அம்பாணி குரூப்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டது. CAG ரிப்போர்ட் சொல்வது என்னவென்றால் GPSC தனது எரிவாயுவை மிகக்குறைந்த விலையில் reliance க்கும் அதானிக்கும் விற்றுள்ளது. இதனால் அரசுக்கு 5000 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
மோடியை வைத்து குஜராத்தை சுரண்டியது போல், இந்தியாவையே சுரண்ட ஒரு திட்டம் தீட்டப்பட்டது.
2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் விளம்பரத்திற்கும் 5000 கோடி செலவு செய்யப்பட்டது. பாஜக கட்சியின் சொத்துமதிப்பை விட பெரிய தொகையை யார் நிதியளித்தார்கள் என்று நினைக்கிறீர்கள்?
வங்காள விரிகுடாவில், 11,000 கோடி மதிப்புள் அரசுக்கு சொந்தமான ONGC எரிவாயு வயல்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் க்கு மாற்றப்பட்டது. அங்கு ரிலையன்ஸ் சட்டவிரோதமாக எரிவாயு எடுக்க தொடங்கியது. NDTV மட்டுமே இதை செய்தியாகியது.
Reliance Jio ஆரம்பிக்கபட்டு BSNL நிறுவனத்தின் உடமைகள், அலைகற்றைகள் அம்பானிக்கு சாதகமாக மாற்றப்பட்டது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
லட்சக்கணக்கான தொழிலாளர்களை கொண்ட BSNL அழிந்து போனது
தொலை தொடர்பு துறையில் சட்டவிரோதமாக மூன்று மாதத்திற்கும் மேல் இலவசமாக சேவை வழங்கியது Jio. இது அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுத்தியது. இலவச சேவையை பயன்படுத்தி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களையும் jio உள்ளவாங்கியது. BSNL மற்றம் பல நிறுவனங்கள் ஓரம் கட்டப்பட்டது.
Reliance க்கு சாதகமாக,
4G சேவையை BSNL க்கு வழங்க மறுத்தது மத்திய அரசு. இதனால் BSNL நிறுவனத்திற்கு மிக பெரிய இழப்பு ஏற்பட்டது
மிகச்சிறிய முதலீட்டுடன் தொடங்கப்பட்ட Jio விற்கு பல ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டது.
ஆனால் மிகப்பெரிய சொத்துக்களை கொண்ட BSNL நிறுவனத்திற்கு கடன் வழங்க முடியாது என்று சொல்லிவிட்டது மத்திய அரசு.
BSNL போன்று பல பொதுப்பணித்துறை நிறுவனங்களை கார்பரேட்களுக்காக அழிக்க தொடங்கியது மோடியின் அரசு.
Public Sector Undertakings (PSUs) என்ற பொதுத்துறை நிறுவனங்களை (எடுத்துக்காட்டுBSNL, BHEL, ONGC, HAL, SAIL, BPCL, Air India..) *உருவாக்கிய நேரு, இவைகள் தான் நவீன இந்தியாவின் கோவில்கள் என்றார். ஏனென்றால் PSUs மூலமாக அரசுக்கு அதிக வருவாய் வரும், அதைவைத்து பல சமுகநல திட்டங்கள் செயல்படுத்த முடியும். ஆனால் இப்போது எல்லாவற்றையும் தனியாருக்கு விற்றுக்கொண்டு வருகிறார்கள். நன்றாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரைவார்த்து கொண்டிருக்கிறார்கள்.
பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதை அழிக்கும் அம்பானியின் புதிய நிறுவனங்கள்:
BSNL – Reliance JIO
BPCL – Reliance Petroleum
LIC – Reliance Insurance
ONGC – Reliance Gas
HAL – Reliance Naval and engineering Ltd
APMC – Reliance Retail
Airports, Railways, Power Ports – Reliance Infrastructure
திடீரென்று நள்ளிரவில் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் Reliance defence. இதற்கு ஒரு தொழிற்சாலை கூட கிடையாது. பேப்பரில் மட்டுமே நிறுவனமாக இருந்தது. ஆனால் இதற்கு தான் Rafale விமானம் செய்யும் contract கொடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான HAL ஓரம் கட்டப்பட்டது. புதிதாக ரஷ்யா, ஸ்பெயின் நாடுகளிடம் போடப்பட்ட ஒப்பந்தங்களிலும் Reliance defence ற்கு contract கொடுக்கும்படி மோடி முடிவெடுத்துள்ளார்.
அம்பானியின் Reliance Infrastructure மும்பையை இதுவரை கொள்ளையடித்தது போதுமென்று, இப்போது அதானி கொள்ளையடிக்க வழி விட்டுள்ளது. அதானி மின்சார நிறுவனம் மும்பை புறநகர்ப் பகுதிகளுக்கு வந்த பிறகு அங்கு மின்சார கட்டணம் இரட்டிப்பாகியுள்ளன.
நேர்மையான முறையில் தனியார்மயமாக்கலை ஊக்குவிப்பதற்கு பதிலாக, தனியார் நிறுவனங்கள் பொது மக்களை கொள்ளையடிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது மோடி அரசு. ஆரம்பத்தில், அம்பானி மக்களைக் கொள்ளையடித்தார், இப்போது அதானியும் அவருடன் சேர்ந்துகொண்டார்.
India is becoming an asset of Reliance
பாசிசம் தன் வேலையை எல்லா எதிர்ப்புக்கு மத்தியிலும் செய்கிறது. நாம் என்ன செய்ய போகிறோம் என்பது தான் வரலாற்றின் கேள்வி.