நடிகை வனிதா விஜயகுமார், கடந்த வருடம் நடந்த பிக்பாஸ் மூலம் மீண்டும் பிரபலமானார். கொரோனா ஊரடங்கு சமயத்தில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதா விஜயகுமாரின் இரண்டாவது திருமணத்தைப் பற்றி அவரிடம் விவாதிக்க முயல, அவரை ஒரு காணொலி சந்திப்பில் லெப்ட் அன்ட் ரைட் வாங்கிவிட்டார் வனிதா. சொல்வதெல்லாம் உண்மையில் புண்பட்ட வெகுஜன ரசிகர்களெல்லாம் வனிதாவின் இந்தப் பேச்சை இணையத்தில் சந்தோஷமாகப் பகிர்ந்து கொண்டார்கள்.
தற்போது விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு தொடரில் பங்கேற்று வருகிறார் வனிதா. அந்த நிகழ்ச்சியிலிருந்து ஏதாவது விஷயங்களை ரெக்கார்ட் செய்து அவ்வப்போது தனது சேனலில் பதிவேற்றி வருகிறார்.
அப்படி இரண்டு நாட்களுக்கு முன்பு, நிகழ்ச்சியில் இருக்கும் அதே மேக்கப் கெட்டப்பில் , ரசிகர்களுக்கு தனது சுய அடையாளம் பற்றியும், முகமூடிக்குப் பின் ஒளியாதீர்கள் என்றும் அக்கா தந்திருக்கும் அன்பு அட்வைஸ் இது. ஒருவேளை ஊரெல்லாம் கொரோனா முகமூடி போட்டுக் கொண்டு மக்கள் அலைவதைப் பார்த்ததும் அவர் மனதில் தோன்றிய தத்துவமாகவும் இருக்கலாம்.
பார்த்து புத்துணர்வு கொள்ளுங்கள்.