புது இயக்குனர் தமிழ்ச் சிலம்பரசன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் எஸ்.டி.ஆர் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா காணொலி மூலம் இன்று நடந்தது.

சமூகப் பிரக்ஞையுள்ள இப்படம் வெளியாவதையொட்டி நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் புதுகை வெற்றிச் சீலன் வழங்கியுள்ள வாழ்த்துரை..

தமிழ் சிலம்பரசன்!

லண்டன் மாநகரத்தில் தனது மேற்படிப்பை முடித்தவுடன் பொருள் தேடி
தேசாந்திரம் செல்ல சிறகை விரிக்காமல்
தம் இருப்பை தாய் தமிழகத்திலே
உறுதி செய்தவர்.

தம்பியின் தேடலுக்கும் அறிவார்ந்த திறமைக்கும்
பெரிய நிறுவனங்களில் லகரங்களை
ஈட்டி மகிழ்வான வாழ்வை சுவைத்திருக்க முடியும்!

தமிழன் தொலைக்காட்சியில் தம்மை இணைத்துக்கொண்டு மாணவர்களின்
அறிவுப்பசியை தணிப்பதற்கு
தமிழகமெங்கும் தடம் பதித்தான்.

மறைக்கப்பட்ட ஆளுமைகளை வரலாற்றுப் பள்ளத்தில் தோண்டியெடுத்து காட்சிப் படுத்துகின்ற
பெரும் பொறுப்பை பிடிவாதமாக
தொய்வின்றி செய்துவந்தான்.

இதோ அவனது அடுத்த நகர்வாக
வெள்ளித் திரையில் தமது முதல் படைப்பை மெல்லச் செதுக்கித் தரவுள்ளான்.

படத்தின் பெயர் எஸ்.டி .ஆர்

அதன் பாடல் வெளியீட்டை மூத்த
பொதுமைப் போராளி ஐயா.நல்லக்கண்ணு
ஐயா.மணியரசன்
அண்ணன்.சீமான் அவர்களின் வாழ்த்துகளோடு இன்று மாலை 5.00. மணிக்கு வெளிவந்திருக்கின்றது.

தமிழ்த் தேசிய இனத்தின் ஒப்பற்றத்
தலைவன் மேதகு பிராபாகரன்
சுவடுகளை மனதில் சுமந்தவன்.

ஈழத்தின் விடுதலை நெருப்பை
அதன் கதகதப்பு குறையாமல் அடைகாத்து வருபவன்.

மொழி
இனம்
விடுதலை
சாதியொழிப்பு
சமனியம்
மனிதம்
இயற்கை
வரலாறு என்று பல்திசையிலும்
பாசங்கு இல்லாமல் தன் மனதில்
சரியெனப்பட்டதை தயங்காமல்
பதியமிட்டு வருகின்றான்.

அவனது முதல் திரைக் கனவை
தமிழ்ச் சமூகம் அரவணைக்க வேண்டும்.

அவனது மனதிற்குள் கனன்று கொண்டிருக்கும் சமூகக் கோபம்
ஒவ்வொன்றாக உலகின் வெளிகளெங்கும் தமிழ்த் திரையில்
ஒளிர ஒரு அண்ணனாக வாழ்த்துகிறேன்.

கனத்த உடலுக்குள் ஒரு குழந்தையைப்
பார்க்க விரும்புகின்ற ஒவ்வொருவரும்
சந்திக்க வேண்டிய மனிதன் தம்பி தமிழ்
சிலம்பரசன்.

பணம் ஈட்ட ஓடாமல் இந்த இளம்
பருவத்தில் இனம் மீட்க துடிக்கின்ற பிள்ளை.

கும்பகோணத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து வறுமையோடு
மல்லுக்கட்டி தன் அறிவால் உயர்ந்த
என் தம்பியை தாயன்போடு ஆரத் தழுவுகின்றேன்.

உன் படைப்புகள் பிரச்சார நெடியில்லாமல் வாழ்வின் எதார்த்தங்களை உள்ளது உள்ளபடி
காட்சிப்படுத்து.அதுவே இச் சமூகத்திற்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன்.

அதே நேரத்தில் பொருள் ஈட்டும் அங்கத்தையும் புரிந்துகொள்.

எத்தனை திறமைகள் இருந்தாலும் இச்சமூகம் பொருளற்றவர்களை ஒரு
பொருட்டாகக்கூட மதிப்பதில்லை. இது
என் வாழ்வனுபவம்.

சிலம்பின் பரல் தெறித்து மதுரை
நடுங்கியது போல திரையில் உன்
அதிர்வலைகள் இச்சமூகத்திற்கு
அறம் பயக்கட்டும்.

வாழ்க! வளர்க! வெல்க!

அன்புடன்
புதுகை.வெற்றிச்சீலன்
மாநில கொ.ப.செயலாளர்
நாம் தமிழர் கட்சி
புதுக்கோட்டை.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.