பின் வரும் காணொலிகள் முத்தையா முரளீதரன் ஈழத்தைப் பற்றியும், இலங்கையைப் பற்றியும், ஈழ விடுதலைப் போராட்டம் பற்றியும் தனது மனத்தில் எத்தகைய மதிப்பீடுகளைக் கொண்டிருந்தார் என்பதை விளக்குகின்றன. இளம் வயதிலேயே சிங்களர்கள் மட்டுமே பங்கு வகித்த இலங்கை கிரிக்கெட் அணியில் ஒரே ஒரு தமிழ் ஆளாக விளையாட ஆரம்பித்த காலம் முதல் தன்னை ஒரு முழுச் சிங்களவனாகவே மாற்றிக் கொண்ட நபர் முத்தையா முரளீதரன். ஈழப் போராட்டத்தில் எந்த ஒரு இழப்பும் அடைந்திடாத அவர் தமிழர்களைக் காட்டிக் கொடுக்கும், போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் பிரபலமாக தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செயல்பட்டிருக்கிறார். பின்வரும் சில காணொலிகள் அவரது சிங்கள அடிமைத் தனத்தையும், அதன் வாலாக செயல்பட முனைந்த அவரது கீழ்த்தரமான ஒட்டுண்ணிப் புத்தியையும் காட்டுகின்றன.
முதலாவது காணொலியில், அவர் வாழ்வின் சிறந்த நாளாக 2009ல் முள்ளிவாய்க்காலில் போர் முடிவடைந்ததைக் குறிப்பிடுகிறார். அதில் 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டது பற்றி அவருக்கு வருத்தமில்லை. பயத்தோடு வாழ்ந்த மக்கள் இனி நிம்மதியாக வாழ்வார்கள் என்று கூறியிருக்கிறார். அதாவது சிங்களப் படைகளினால் அதற்குப் பின்னும் இன்றுவரை சொந்த நாட்டிலேயே அகதிகள் நிலைக்கு வாழும் நிலைக்குப் போய்விட்ட தமிழர்கள் வாழ்வு போருக்குப் பின்தான் நிம்மதியாக இருப்பார்கள் என்கிறார்.
இரண்டாவது காணொலியில், இலங்கையின் ஆதிக்குடிகள் சிங்களரே என்பதைக் குறிக்கும் வகையில் இது சிங்கள-பௌத்த நாடு, நான் ஒரு ஸ்ரீலங்கன், அப்புறம் தான் நான் தமிழன் என்கிறார். இங்கிருக்கும் சங்கிகள் பலர் நான் முதலில் இந்தியன் அப்புறம் தமிழன் என்று பாடம் எடுப்பார்களே. அதே போன்ற விஷயம் தான் இது. இந்தியாவிற்கும் தமிழ்நாட்டுக்கும் போர் எதுவும் நடந்துவிடவில்லை தான். ஆனால் ஈழத்தில்.. ?
முரளி : இது ஒரு சிங்கள பௌத்த நாடு.
உண்மை : பாடல் பெற்ற சிவத்தலம் கொண்ட நாடு ஈழ நாடு (இலங்கை). திருக் கோணேச்சரம் கோயில், திருக்கேதீஸ்வரம். மூத்த குடியினர் தமிழர். #ShameOnVijaySethupathi @VijaySethuOffl
த்ரேட் 2 pic.twitter.com/sdHzrl8ca4— மாயன் (@MaayanTamil) October 14, 2020
கீழே உள்ள காணொலியில், 2013ல் இங்கிலாந்துப் பிரதமர் கேமரூன் இலங்கை வந்தபோது அவரைச் சந்தித்தார் முரளீதரன். ஈழத்தில் நடந்த படுகொலைகளைப் பற்றி கேமரூனுடன் பேசியதைப் பற்றிக் கேட்ட போது, கேமரூனுக்கு இலங்கையில் நடந்தது சரியாகத் தெரியாது. போர் என்றால் இருபுறமும் அழிவுகள் இருக்கும் என்று ஏதோ இரண்டு நாடுகளுக்கிடையே நடந்த சண்டையைப் பற்றிப் பேசுவது போல சாதாரணமாகப் பேசினார் முரளீதரன்.
இதே வார்த்தைகள் தான் நாளை இவர் ஐநாவில் தமிழினத்தின் தூதுவராக சிங்கள அரசால் அனுப்பப்படும் போதும் பேசப்படும். தமிழர்கள் படுகொலையெல்லாம் நடக்கவில்லை. போர் நடந்தது. அதில் கொஞ்சம் பேர் செத்தார்கள். அவர்களும் தீவிரவாதிகள் மட்டுமே என்று கதையை முடிக்க இவர் வாக்குமூலம் முக்கியமானதாக மாற்றப்படும்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இலங்கை வந்த நேரம். (15 Nov 2013). முரளி அவருடன் சென்றார். அங்கு காணாமல் ஆக்கப்பட்ட தனது தங்கை, தம்பி, மகன், மக்களை தொலைத்தவர்கள் போராடினார்கள். அவர்களை! #ShameonyouVijaySethupathi @VijaySethuOffl
த்ரேட் 3 – 1/2 pic.twitter.com/kuOA8jkeUD— மாயன் (@MaayanTamil) October 14, 2020
கீழேயுள்ள இந்தக் காணொலியில் டேவிட் காமரூன் யாழ்ப்பாணத்திற்கு சென்று பார்த்ததை , ஏதோ ஒரு ஆள் சாதாரணமாக யாரோ அங்கே படுகொலை நடந்தது என்று தவறாகச் சொல்லி அதைக் கேட்டு அங்கே இங்கிலாந்துப் பிரதமர் போனதாகவும், இங்கிலாந்துப் பிரதமருக்கு தவறான தகவல் சொல்லப்பட்டிருக்கிறது என்றும் முத்தையா முரளீதரன் சொல்கிறார்.
பிரதமர் கேமரானை யாழ்ப்பாணத்தில் யுத்தத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டவர்களின் குடும்பத்துப் பெண்கள் அழுதபடியே முற்றுகையிட்டு தங்கள் குழந்தைகளைத் தேடித் தருமாறு கேட்டதை, யாரோ 20 – 30 பெண்கள் வந்து அழுகையாகச் சொன்னால் அது உண்மையாகிவிடுமா என்கிறார்.
இதுதான் இந்த 800 விக்கெட் எடுத்த மாபெரும் ஸ்ரீலங்கன் என்று தன்னை பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் இந்த தன்மானத் தமிழனின் ஈழப் போராட்டம் பற்றிய கருத்துக்கள். இவற்றுக்கும் ராஜபக்சே வகையறா சொல்லும் கருத்துக்களுக்குமிடையே பெரிய வித்தியாசமில்லை.