முத்தையா முரளீதரனின் வாழ்க்கை வரலாற்றை திடீரென்று லைக்கா நிறுவனம் படமெடுக்க நினைப்பதும், அதற்கு தமிழ்நாட்டில் ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கும் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க இருப்பதும், அதை புரோமோட் செய்ய நமல் ராஜபக்சே ட்வீட் போடுவதும், இவை எல்லாம் அரசியலற்ற நிகழ்வுகளா ?
‘இல்லை’ என்பதை விளக்குகிறார் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி.
முத்தையா முரளீதரனின் வாழ்க்கை அரசியலற்றது அல்ல. ஒரு மலையகத் தமிழராகப் பிறந்த அவர் முள்ளி வாய்க்காலுக்கு முன்பு தனது ஈழ எதிர்ப்பை மறைமுகமாகவும், முள்ளிவாய்க்காலுக்குப் பின் வெளிப்படையாகவும் காண்பித்தவர். தனது அண்ணனை ராஜபக்சேவின் கட்சியில் வேட்பாளராக நிறுத்தி வாக்கு கேட்டு வெற்றி பெறச் செய்தவர்.
ஈழத்தமிழருக்கு எதிராக ஐநா சபையில் பேசுவதற்காக தமிழர் பிரதிநிதியாக அனுப்பப்படலாம். அங்கே அவர் ஒரு தமிழராக நின்று இனப்படுகொலையே நடக்கவில்லை என்று சாட்சி சொல்வார். தமிழ்மக்கள் முன் 800 பட ஹீரோவாக நிலைநிறுத்தப்படும் அவர் சொல்வதை மக்கள் அமைதியாக ஏற்றுக் கொள்வார்கள். இதெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது.
காணொலியில் முத்தையா முரளீதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பின் உள்ள அரசியலை விளக்குகிறார் திருமுருகன் காந்தி.