இந்தியா முழுவதும் பாஜக பல மாநிலங்களில் செய்யும் பிரித்தாளும் சூழ்ச்சியை தமிழ்நாட்டிலும் அரங்கேற்ற ஆரம்பித்துள்ளது. அதன் ஆக்சன் ப்ளானாக தற்போது இருப்பது இவைதான்.
1. கட்சியில் சினிமா, ஸ்போர்ட்ஸ் பிரபலங்களை காசுகொடுத்து சேர்ப்பதும். அத்தோடு ரவுடித்தனங்களும், வன்முறைகளும் செய்வதற்கு ரவுடிகளையும் கட்சியில் இணைப்பதும் செய்யப்படுவது.
2. மாநிலத்தில் உள்ள மற்ற கட்சிகளை இரண்டு அல்லது மூன்றாகப் பிரித்து தனிக் குழுக்களாக போட்டியிட வைத்து பிரதானமான ஓட்டுக்களை பிரிப்பது.
3. காங்கிரஸ் உடன் உள்ள மாநிலக் கூட்டணிக் கட்சிகளை உடைத்து, அதிகாரம், இன்கம்டாக்ஸ் ரெய்டு போன்றவை மூலம் மிரட்டி காங்கிரஸிடமிருந்து பிரித்து விடுவது. இதன் மூலம் காங்கிரஸ் மத்தியில் பாஜகவுக்கு ஒரு சரியான மாற்றாக வரமுடியாமல் போகும் போது எதிர்க்க ஆளில்லாமல் மீண்டும் பாஜக மத்தியில் அதிகாரத்தை எளிதில் பிடிக்க முடியும்.
இந்த ஆக்சன் ப்ளான்களின் விளைவுகளாக நடக்க இருப்பவையாக பின்வரும் விஷயங்கள் இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் முணுமுணுக்கப்படுகின்றன.
சரத்குமாரின் ச.ம.க, விரைவில் பாஜகவில் இணைய இருக்கிறது. சரத்குமாருக்கு தேசிய அளவில் பதவி அல்லது தமிழக தலைவர் பதவி டிமாண்ட். அவரோடு ராதிகாவும் விரைவில் இணைய, அவருக்கு பாஜக ஆதரவு தொலைகாட்சிகளில், ராடன் நிறுவனத்திற்கு நிகழ்ச்சி தயாரித்து கொடுக்க ஒப்பந்தம். ஏற்கனவே முத்தையா முரளீதரன் விஷயத்தில் சம்பந்தம் இல்லாமல் வாலண்டியராக ஆஜரானார் சித்தி ராதிகா. ராதிகா சிங்கள வம்சாவழியினர் என்பதும் அப்போது வெளியே வந்து விழுந்த ஒரு தகவல்.
80 கோடி கடனில் இருக்கும் விசாலுக்கு பல கோடி உதவி. இதில் முற்போக்கு முகமூடி போட்டுள்ள, சமுத்திரக்கனி, பார்த்திபன், பாண்டியராஜன், போன்ற திரை பிரபலங்கள் பல கோடிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு விரைவில் பாஜகவில் இணைகிறார்கள் என்பது.
வைகை புயலும் இணைகிறார்.
வரும் ஜனவரிக்குள் இந்த கோமாளிக் காட்சிகள் எல்லாம் நடக்க இருக்கிறது. அதிமுக கூட்டணியில் சுமார் 60 இடங்களை கேட்கும் பாஜக இந்த திரை பிரபலங்களுக்கு சீட் கொடுத்து தங்கள் செல்வாக்கை உயர்த்தி கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளதாம். சினிமாவினால் ஆட்சியை பிடிக்க மட்டுமல்ல, அதே பிரபலங்களைக் காட்டியே மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கவும் முடியும் என்று பாஜக கணக்குப் போடுகிறதாம்.
இதற்காக வருமான வரித்துறை மூலமாகவும் பல திரைபிரபலங்களை மிரட்டி தங்கள் கட்சிக்கு பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளது சங்கி கூட்டம் !!
இதுல பாருங்க…
பாஜக மூஞ்ச காட்டி ஓட்டு கேட்டா நோட்டாவோடுதான் போட்டி போட முடியும்னு தெரிஞ்ச அமித்சா இந்த பிரபலங்களை நிற்க வைப்பதன் மூலம், அவர்களின் செல்வாக்கை பாஜகவின் செல்வாக்காக காட்டி அறுவடை செய்யலாம்னு இருக்கிறார்.
தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க போகிறார்களா, அல்லது பாஜகவின் சதி வலையில் வீழப் போகிறார்களா என்பதை தேர்தல் முடிவுதான் தெளிவுப்படுத்தும்!
இந்த தேர்தலில் தமிழகத்தில் இதுவரை நடக்காத அளவிற்கு ஓட்டு எந்திர தில்லுமுல்லுகள் நடக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஓட்டு எந்திர பித்தலாட்டத்தை அறிந்த பலரும் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்!!!
ஆனால் பாஜக மறந்த ஒரு விஷயம் என்னவென்றால், வெறும் பிரபல நடிகர் என்பதற்காக எந்த நடிகரையும் ஆள வைத்ததில்லை தமிழர்கள். எம்ஜிஆர் அண்ணா, பெரியார் பெயர் சொல்லி அவர்கள் போல் மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவேன் என்று, பொதுவுடைமைப் பாடல்கள் பாடித் தான் மக்கள் மனதில் இடம் பிடித்தார். ஜெயலலிதா நான் எம்ஜிஆர் வழியில் ஆட்சி செய்வேன் என்று மக்கள் காலில் விழாத குறையாக கெஞ்சித் தான் ஆட்சியைப் பிடித்தார்.
மேலே பேசப்படும் சரத்குமார் உள்ளிட்ட இந்த நடிகர்கள் தங்கள் வாழ்வில் பைசா கூட மக்களுக்காக செலவு செய்யாதவர்கள். இவர்கள் தாமரைக்காக வந்து நின்றால் இவர்களையும் தாமரையோடு சேர்த்து மக்கள் தூக்கி வீசி எறிவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.