துருக்கியில் அம்மாவை அன்னை என்று அழைப்பார்கள். இது போன்று மடகாஸ்கர், துருக்கி, ஆப்பிரிக்க நாடுகள், இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான் போன்று உலகின் பல நாடுகளிலும் தமிழ்ப் பெயர் வழங்கி வருவதை எடுத்துக் காட்டுகிறார் ஆய்வாளர் பாலு.
இதன் மூலம் தமிழர்கள் மிகத் தொன்மையான இனம் என்பதோடு மட்டுமின்றி உலகின் தொன்மையான நாகரிகங்கள் எனப்படும் கிரேக்க, எகிப்து , ரோமானிய போன்ற நாகரீகங்களுடன் தொடர்பில் இருந்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
தமிழின் மிகத்தொன்மையான நூல் எனப்படும் தொல்காப்பியமே ஒரு இலக்கண நூல் எனில் அதற்கும் முன்பே நாகரீகம், மொழி தோன்றி வளர்ந்திருக்கவேண்டும் என்கிறார்கள்.