அது ஒரு சினிமா மட்டுமே என்ற எண்ணத்தோடு, சூர்யா என்னும் நடிகரை மட்டும் பார்த்திருந்திருந்தால் நீங்கள் புத்திசாலி.
ஆனால் அதைத்தாண்டி, அது ஒரு உண்மைக்கதை என்றும் அதன் உண்மையான ஹீரோ கோபிநாத் என்னும் ஏர் டெக்கான் விமான நிறுவனர் என்றும் உங்கள் மதிப்பும் மரியாதையும் சூர்யாவைத்தாண்டி சென்றால், இந்த பதிவு உங்களுக்கு அவசியம்.
1. சாமானிய மனிதனும் விமானத்தில் பறக்கலாம் என்னும் புதிய சிந்தனையை உருவாக்கிய அறிவாளி என நினைக்கிறீர்களா?
மலிவு விலை விமானம் என்பது ஏர் டெக்கானின் புதிய ஐடியா கிடையாது. ஏர் டெக்கான் 1992 ல் உருவானது.
1967 லேயே சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது தான் மலிவு விலை விமானம் என்ற ஐடியா. இது தான் உலகின் முதல் மலிவு விலை விமானம்.
1985 ல் அயர்லாந்தில் உருவாக்கப்பட்டது ரையன் ஏர் என்னும் மலிவு விலை விமான சேவை.
சிட்டுக்குருவியை பார்த்து தோன்றிய, ஏர் டெக்கானின் புதிய ஐடியா இல்லை இது🤪.
2. மலிவு விலை விமானம் மூலம் சாமானியனும் பறக்கலாம் என்னும் சமத்துவ கொள்கையை போதித்தவர் என நினைக்கிறீர்களா?
உலகில் ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருந்த மலிவு விலை விமானங்கள், லாபகரமாக செயல்பட்டுக்கொண்டிருந்ததை பார்த்து காப்பியடிக்கப்பட்ட வியாபார யுத்தியே தவிர இதில் சோஷலிசம் எதுவும் கிடையாது.
ஒரு காலத்தில் பணக்காரர்கள் மட்டும் வைத்திருந்த செல் போன் இன்று பிச்சைக்காரன் வரை வைத்திருக்கும் சூழல் உருவானதற்கு காரணம் ஏர்டெல், ஜியோ போன்ற கம்பெனிகளின் வியாபார யுத்தியா இல்லை பொதுவுடைமை கொள்கையா? ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் மட்டும் இந்த செல் போன் பயன்பாட்டாளர்களிடமிருந்து முதலாளிகளுக்கு சென்றால் கூட, நம் நாட்டில் இதன் லாபம் ஒரு நாளைக்கு ஒரு கோடி!😳
3. மலிவு விலை விமானத்தை விஜய் மல்லையா விலை பேசும்போது, மக்கள் நலனுக்காக அதனை ஏர் டெக்கான் விட்டுதரவில்லையே என சினிமாவை பார்த்து நினைக்கிறீர்களா?
ஏர் டெக்கான் ஆரம்பித்த மூன்றாவது ஆண்டே, விஜய் மல்லையாவிற்கு அதனை விற்று விட்டது. கிங்பிஷர் ரெட் என்னும் பெயரில் மாறிப்போனது.😀
4. பல்வேறு தடைகளைத்தாண்டி வெற்றி பெற்ற ஒரு சாமானிய மனிதனை போற்ற வேண்டாமா என நினைக்கிறீர்களா?
கோரூர் ராமசாமி கோபிநாத் அய்யங்கார் என்னும் ஒரு பிராமணருக்கு, இந்தியாவில் அரசு தரப்பில் அவரின் முயற்சிகளுக்கு எந்த ஒரு தடையும் இருக்கவில்லை.
மாறாக, மோடி அரசின் உதவியுடன் உடான் திட்டத்தின் மூலம் அரசாங்கமே அவரை தூக்கி விட்டது. அரசு வங்கிகளில் வாங்கிய கடனை கோபிநாத் அய்யங்கார் கட்டாமல் ஏமாற்றியதைத்தொடர்ந்து, வங்கிகள் கடனை திரும்ப பெற முடியாமல் தவித்தன. இது மக்களின் பணம் தான்.🤨
5. ஒரு சாதாரண மனிதன் இவ்வளவு உயர்ந்ததை பாராட்டுவது தவறா என நினைக்கிறீர்களா?
புகழ்பெற்ற சைனிக் பள்ளியில் படித்து, விமானப்படையில் கேப்டனாக பணிபுரிந்து, பின்னர் அதனை ராஜினாமா செய்து விட்டு, பல ஏக்கர்களில் விவசாயம் செய்து, பின்னர் அதனையும் விட்டு என்ஃபீல்ட் மோட்டார்பைக்கின் டீலராகி, பின்னர் கர்நாடக ஹசன் ஊரில் ஹோட்டல் ஆரம்பித்த ஒரு தொழிலதிபர் தான் இந்த மலிவு விலை விமானத்தை ஆரம்பித்தார்.
பின்னர் அதனை நல்ல லாபத்திற்கு விற்று விட்டு, சரக்கு விமானம் ஆரம்பித்து அதில் வங்கிப்பணத்தை திருப்பிக்கட்டாமல், மோடியின் குஜராத் அரசின் ஆதரவுடன் உடான் விமானம் அட்வைசராக இருப்பவர் சாமானியரா? 😉
6. வியாபாரமேயிருந்தாலும், ஒரு இந்தியர் இத்தகைய சாதனையாளராக இருப்பது நமக்கு பெருமை தானே என நினைக்கிறீர்களா?
இவர் ஒரு அரசியல் வாதி. 2009 ல் சுயேச்சையாக பெங்களூரில் நின்று தோற்றுப்போனவர்.
பின்னர் 2014 ல் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக நின்று தோற்று போனவர்.
அர்விந்த கேஜ்ரிவால் அவர்கள் அண்மையில் சில்லரை வியாபாரத்தில் அன்னிய நாட்டு கம்பெனிகள் ஈடுபடக்கூடாது என தடை விதித்ததை எதிர்த்து பேசியவர் தான் இந்த கோபிநாத்.
இந்திய பெரும் முதலாளிகள் சில்லரை வியாபாரத்தில் ஈடுபட அனுமதிக்கும்போது, பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபடுவதை தடுப்பது அநியாயம் என வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பெருமைக்குரிய இந்தியர் தான் இந்த கோரூர் ராமசாமி கோபிநாத் அய்யங்கார் என்னும் பிராமண இந்தியர்.😳
7. சரி, போகட்டும்! இவரைப்பற்றி நான் ஏன் இவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்களா?
சூரரைப்போற்று போன்ற சினிமாக்களின் மூலம் ஏற்படும் பிம்பத்தை வைத்துத்தான் பல அரசியல் வாதிகள் உருவாகினர்.
இந்த பிம்பத்தை வைத்து பா.ஜ.க வேட்பாளராக தமிழகத்தில் கோபிநாத் அய்யங்கார் களமிறங்குவதற்கு வாய்ப்புள்ளது. அதன் முன்னோடியாகக்கூட இந்தப்படம் இருக்கலாம்.
வெள்ளித்திரையில் ஏற்படுத்தப்படும், மாயத்தோற்றத்தை சின்னத்திரைகள் ஊதிப்பெரிதாக்கினாலும், எல்லோர் கைகளிலும் தவழும், “குட்டித்திரைகள்” மூலம் அவ்வப்போதே கிழித்து விடுவது தான் நாட்டிற்கு நல்லது.
ஏற்கெனவே டீ ஆற்றியவர் ஏழைகளின் பசியாற்றுவார் என நினைத்து ஏமாந்தது போதும்!🧐
இப்படிக்கு,
வரும் முன் காப்பான்.
😎
–வாட்ஸப் பதிவு.