முதுபெரும் கவிஞரும், திராவிட இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவரும், முன்னாள் சட்டசபை அவைத் தலைவருமான புலமைப் பித்தன் உடல் நிலை மூப்பால் சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
தீவிரமாக விடுதலைப் புலிகளை ஆதரித்தவர் புலமைப் பித்தன். எம்ஜிஆர் காலத்திலிருந்தே சினிமா பாடல்கள் எழுதி வந்துள்ளார்.
நான் விடுதலைப் புலிகளை என்றுமே ஆதரித்து வந்துள்ளேன். தம்பி பிரபாகரன் ஆரம்ப காலத்தில் என் வீட்டில்தான் இருந்தார்.
ஒரு நாள் இலங்கைக்கு போகும்போது என்னுடைய இளையமகன் புகழேந்தி, அவரிடம், சித்தப்பா என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னான்.
அதற்கு பிரபாகரன், நீ என்னோடு வந்துவிட்டால் அப்பா அம்மாவை யார் பார்ப்பார்கள் என்று சொல்லி அழைக்காமலேயே போய்விட்டார்.
அப்படி ஒரு வேளை அவனை அழைத்துப்போய் இருந்தால், அங்கு நடக்கும் விடுதலை போரில், என் மகன் வீர மரணம் அடைந்திருப்பான்.
ஆனால், அவ்வாறில்லாமல் இங்கு விபத்தில் இறந்துவிட்டான்.
நீங்கள் தமிழனாக, இந்தியனாக, மனிதனாக இருங்கள்.புலிகளை யாரும் பாதுகாக்க வேண்டாம்.
அவர்களை அங்குள்ள மக்களே பார்த்துக்கொள்வார்கள். இந்திய அரசு சொன்னால் இலங்கை அரசு போரை நிறுத்தி இருப்பார்கள்”
போய் வா! புலிகளின் தோழனே!
நிச்சயம் ஒருநாள் தமிழீழம் வெல்லும்!
கவிஞர் #புலமைப்பித்தன் அவர்களுக்கு வீர வணக்கம்
– கதிர் நிலவன்
*ஆயிரம் நிலவே வா – அடிமைப்பெண்
*ஓடி ஓடி உழைக்கணும் – நல்ல நேரம்
*நீங்க நல்லாயிருக்கணும் – இதயக்கனி
*பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த – நினைத்ததை முடிப்பவன்
*இனியவளே என்று – சிவகாமியின் செல்வன்
*சிரித்து வாழ வேண்டும் – உலகம் சுற்றும் வாலிபன்
*உச்சி வகுந்தெடுத்து – ரோசாப்பூ ரவிக்கைக்காரி
*ராத்திரியில் பூத்திருக்கும் – தங்கமகன்
*கண்மணியே பேசு – காக்கிச்சட்டை
*நீ ஒரு காதல் சங்கீதம் – நாயகன்
*தென்பாண்டி சீமையிலே – நாயகன்
*உன்னால் முடியும் தம்பி , புஞ்சை உண்டு – உன்னால் முடியும் தம்பி
*கல்யாண தேன் நிலா – மவுனம் சம்மதம்
இந்த பாடல்களை கேட்கும் பலரும் கண்ணதாசனோ , வாலியோ , வைரமுத்துவோ எழுதியிருப்பார்கள் என நினைக்கக்கூடும்
இவை மட்டுமல்ல , இன்னும் எண்ணற்ற அருமையான பாடல்களுக்கு சொந்தக்காரர் கவிஞர் புலமைப்பித்தன் .
கவிஞருக்கு அஞ்சலி !