மத ரீதியாக மக்களைத் துண்டாடும் சிஏஏ சட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் இயற்றப்பட்டது.
இன்று சட்டசபையில் குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை முன்வைத்து பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் “ஒன்றிய அரசின் குடியுரிமைச் சட்டம் அகதிகளாக இந்தியாவிற்கு வருபவர்களை, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மதநல்லிணக்கத்திற்கு எதிராக, மத ரீதியாக பிரித்து முஸ்லீம்கள் தவிர பிற மதப் பிரிவினருக்கு மட்டும் குடியுரிமை தரப்படும் என்று சொல்கிறது. ஆதலால் இதை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக, அதிமுக கட்சிகள் இத்தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தன.
குடியுரிமைச் சட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளிலிருந்து வரும் முஸ்லீம் அல்லாத மற்ற மதத்தவர்களுக்கு மட்டும் இந்தியாவில் குடியுரிமை தருவதாகச் சொல்கிறது.
இந்திய அரசியல் சட்டப்படி நாட்டு மக்களின் மேல் மொழி, மதம், சாதி போன்ற எந்தவிதப் பாகுபாடுகளும் காட்டாமல் அனைவரையும் சமமாக நடத்தவேண்டும். ஆனால் சிஏஏ சட்டம் அதற்கு விரோதமாக இந்துக்களை மட்டும் பாதுகாக்கும் நோக்கத்தோடு இருப்பதாலும், பிறநாட்டிலிருந்து வரும் அகதிகளைப் பாதுகாக்க மறுப்பதாலும் இது அரசியல் அமைப்புக்கே விரோதமானதாக விமர்சிக்கப்பட்டது. அத்தோடு இதில் இலங்கைத் தமிழர்களை யும், ஈழ அகதிகளையும் வேண்டுமென்றே சேர்க்காமல் விட்டது பாஜக அரசு. அதனால் இலங்கைத் தமிழருக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்கமுடியாமல் செய்யப்பட்டது.
இத்தோடு, நாட்டில் வாழும் அனைவரும் தாங்கள் இந்நாட்டின் குடிமகன்கள் என்கிற ஆதார ஆவணங்களை கொடுத்தால் மட்டுமே அவர்கள் இந்தியக் குடிமகன்கள் என்று கருதப்படுவார்கள் என்று போடப்பட்ட NRC சட்டம் எல்லையோர மாநிலமான அஸ்ஸாமில் வாழும் பல லட்சம் இந்துக்களையும், முஸ்லீம்களையும் ஒரே நாளில் நாட்டுக் குடிமகன்கள் இல்லையென்று ஆக்கிவிட்டது.
இதனால் பெரும் போராட்டங்கள் வெடித்ததால் அதில் முஸ்லீம்களை விட்டுவிட்டு இந்துக்களை மட்டும் இந்தியக் குடிமகன்களாக்க சிஏஏ சட்டம் இயற்றப்பட்டது. மதவிரோதமாக மற்றும் முஸ்லிம் விரோதமாக உள்ள இந்த இரண்டு சட்டங்களையும் எதிர்த்து இந்தியா முழுவதும் மக்கள் குறிப்பாக முஸ்லீம்கள் போராடி வருகின்றார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் சிஏஏ சட்டத்தை நீக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளதானது, எல்லா மதங்களும் இணைந்து வாழும் நாடு இந்தியா என்கிற அரசியல் அமைப்பு சட்டத்தை பிரதிபலிப்பதாக உள்ளதால், அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாஜகவுக்கும்