ரோக் திரைப்பட புகழ் இஷான் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முதன்மை வேடங்களில் நடிக்கும் அதிரடி திரைப்படம் ஒன்றின் மூலம் எழுத்தாளர் ரமணா கோபிசெட்டி ‘தத்வமசி’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் கருத்தை மையப்படுத்திய மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
“நான் தான் அது” எனும் பொருளுடைய அத்வைத பாரம்பரியத்திலிருக்கும் ஒரு சமஸ்கிருத மந்திரம் இதுவாகும். பண்டைய இந்து நூலான உபநிஷத்தில் இருக்கும் நான்கு மகாவாக்கியங்களில் தத்வமசி ஒன்றாகும். இது பிரம்மனுடன் ஆத்மாவின் ஒற்றுமையைக் குறிக்கப் பயன்படுகிறது.
தலைப்பு குறிப்பிடுவது போல, தத்வமசி ஒரு தனித்துவமான கதைக்களத்துடன் கூடிய பிரமாண்ட படமாக இருக்கும். தலைப்பைப் போலவே கான்செப்ட் போஸ்டரும் சுவாரசியமாக உள்ளது. குண்டலி (ஜாதகம்) போன்று லோகோவில் இரத்த அடையாளங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மோஷன் போஸ்டர் ‘தத்வமசி’ படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை அளிக்கிறது. “மனிதகுல வரலாற்றில் இதுவரை இல்லாத சக்தி. எல்லையற்ற உணர்ச்சி. பழிவாங்கலின் உச்சத்திற்கு சாட்சியாக இருங்கள்” என்று மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ள ஆங்கில வரிகள் கூறுகின்றன. மோஷன் போஸ்டருக்கான சாம் சிஎஸ்ஸின் விறுவிறுப்பான இசை படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது.
தத்வமசி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் தயாரிக்கப்படும் அகில இந்திய படமாகும்.
விரைவில் தொடங்கப்படவுள்ள உள்ள தத்வமசி, அதன் புதிய கதை களத்தால் மக்களை பரவசப்படுத்தும். பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ராதாகிருஷ்ணா தெலு தனது RES என்டர்டெயின்மென்ட் LLP நிறுவனத்தின் மூலம் திரைப்படத்தை தயாரிக்கிறார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார், ஷ்யாம் கே நாயுடு ஒளிப்பதிவு செய்ய. மார்த்தாண்ட் கே வெங்கடேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்தியாவின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் படத்தில் பணிபுரிகிறார், சந்திரபோஸ் பாடல் வரிகளை இயற்றுகிறார்.