அன்புள்ள விஜய் டீவி,
பாக்குறவங்கெல்லாம் கேனைன்னு நினைத்திருந்தால் மட்டுமே
இப்படி ஒரு கான்செப்ட் பிடித்து ப்ரோமோ ட்ராமா போட முடியும்.
பெற்றோர், தாய் அல்லது தந்தை குழந்தைகளை பிரிந்து ஷுட்டிங் வருவது மற்றும் அதனால் விளையும் சின்ன சின்ன இழப்புகளை ஊதி பெரிதாக்கி ஒப்பாரி சீன் போடுவது பார்க்க சகிக்கவில்லை. மேற்படி அழுகிற கோஷ்டிகளெல்லாம் மாதம் பத்து நாள் ஷுட்டீங்கில் பங்கேற்றால் பெரிது. மீதம் இருபது நாட்கள் வீட்டில் உட்கார்ந்து பிள்ளைகளுடன் நேரம் செலவிட வழியுண்டு.
ஆனால் இங்கே சாமான்ய மக்கள் வேறு ஊர்களில் வெளிநாடுகளில் என்று பிள்ளைகளை குடும்பத்தை பிரிந்து பாடுபடுகின்றனர்.
அவர்கள் கூட உங்கள் அளவுக்கு சீன் போடுவதில்லை.
அதிலும் நிஷா மற்றும் ஈரோடு மகேஷ் அழுவதில் செயற்கைதனம் துருத்தி கொண்டு பார்க்க சகிக்கவில்லை. ஈரோடு மகேஷுக்கு எல்லாம் எங்களை பார்த்தால் எப்படி தெரியுதுன்னு தெரியவில்லை. இந்த ப்ரோமோவை அதில் பங்கேற்ற நபர்களை ஒரு ரூமில் அடைத்து நாள் முழுக்க ரிப்பீட் மோடில் பார்க்க வைக்க வேண்டும்.
“யாவாரத்துல ஒரு நியாயம் வேணாமா!ராஸ்கல்ஸ்!”
#Vijaytv
முகநூலில் Revathy Ravikanth