சிம்பதியை சம்பாதிப்பதற்காக நாம் செய்யும் சில சம்பவங்கள் நாமே எதிர்பாராத அளவுக்கு நம்மை தேடி வந்து ரிவீட் அடிக்கும். அப்படிப்பட்ட ஒரு துயர சம்பவத்தில் சிக்கி வெட்கக்கேடான நிலையில் தலைகுனிந்து நிற்கிறது விஜய் டி.வி.
‘பிசியான’ டிவி நட்சத்திரங்கள் தங்கள் குழந்தைகளை மற்ற உறவுகளை எப்படியெல்லாம் மிஸ் பண்ணுகிறார்கள் என்றொரு நிகழ்ச்சியை நடத்திய விஜய் டிவி அதில் சம்பந்தப்பட்டவர்களை ஸாரி கொஞ்சம் ஓவர் என்றுசொல்லுமளவுக்கு அழ வைத்துவிட்டது.
அவர்களின் பேட்டா,கன்வேயன்ஸுக்கான அந்த அழுகை அவ்வளவு செயற்கையாக இருக்கவே நெட்டிசன்கள் கடந்த நாலைந்து நாட்களாகவே அவர்களை வச்சு செய்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஈரோடு மகேஷ் இந்நிகழ்ச்சியால் வேரோடு சாய்ந்தார்.
அந்நிகழ்ழ்சியை நக்கலடித்து லட்சக்கணக்கில் மீம்ஸ்கள் குவிவதால் ரொம்ப அவமானப்போச்சி குமாரு. கொஞ்ச நாளைக்கு சானல்ல யாரும் அழாமப் பாத்துக்கோங்க’ என்று நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு மேலிடத்திலிருந்து ஒரிஜினல் கண்ணீரோடு கோரிக்கை வந்திருக்கிறதாம்.
கலாய்ப்புகளின் திலகமாக முகநூல் பிரபலம் சத்யா மருதாணி அவர்களின் இந்த 2 நிமிட காணொலியை கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து பேஸ்புக்கில் சென்று கண்டு களியுங்கள்…