அஜீத்-போனிகபூர்-ஹெச்.வினோத் கூட்டணியின் ‘வலிமை’ மற்றும் அடுத்த தயாரிப்பை சன் டிவி மற்றும் ரெட்ஜெயண்ட் நிறுவனங்களுக்கு விற்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் பஞ்சாயத்துகளுக்கு முடிவு காணவே போனிகபூர் இரு தினங்களுக்கு முன்பு வருங்கால முதல்வர் உதயநிதியை சந்தித்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்ப்பட தயாரிப்பாளர்களை உதாசீனம் செய்துவிட்டு வட இந்தியத் தயாரிப்பாளரான போனிகபூருடன் அஜீத் அடுத்தடுத்து மூன்று படங்கள் செய்துவருவது ஊரறிந்த சமாச்சாரம். இக்கூட்டணியின் முதல் பட சாட்டிலைட் உரிமை ஜீ தமிழ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது போலவே அடுத்த இரு படங்களுக்கும் அதுவே என ஒப்பந்தம் இருந்தது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் பழைய நாட்டாமைகள் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதால் முக்கியமான படங்களைத் தங்கள் கஷ்டடிக்குள் கொண்டுவந்துகொண்டிருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக அஜீத்தின் வலிமையும், இதே கூட்டணியின் அடுத்த படமும் குறி வைக்கப்பட்டது. ஆனால் தனக்கு அரசியல் நிறம் வேண்டாம் என்று நினைக்கும் அஜீத் ‘வலிமை’படத்தை சன் டிவிக்கோ அதன் விநியோக உரிமையை உதய்நிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனத்துக்கோ தருவதாக இருந்தால் மூன்றாவது பட ஒப்பந்தத்தை ரத்து செய்வதைத்தவிர வேறு வழியில்லை என்று போனியாரிடம் கறாராகக்கூறிவிட்டார்.
அதைக்கேட்டு அதிர்ந்த போனி வேறு வழியில்லாமல் தன்னிலை விளக்கத்தை அளிக்கவே நேற்று முன் தினம், நிகழ்கால நிழல்முதல்வரும் வருங்கால முழு முதல்வருமான உதயநிதியைச் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்பை சற்றும் எதிர்பாராத அஜீத்,” அட துரோகியே’ என்றபடி தனது பைக் பயணத்தின்போது மூன்று முறை அடிவானத்தை நோக்கி குறிதப்பாமல் சுட்டாராம்.