பிரபல நடிகரும் கன்னடப்பட உலகின் சூப்பர் ஸ்டாருமான புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பால் சற்று முன்னர் காலமானார். அவருக்கு வயது 46.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி,பின்னர் கதாநாயகனாக உயர்ந்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் புனித் ராஜ்குமார். அவரை கன்னட மக்கள் அப்பு என்ற செல்லப்பெயரால் அழைத்தனர்.
இன்று 29.10. வெள்ளியன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது புனித் ராஜ்குமாருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அவரது உதவியாளர்கள் அவரை பெங்களூரின் பிரபல மருத்துவமனையான விக்ரம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பார்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சற்றுமுன்னர் அவர் உயிர் பிரிந்தது.
அவரது மறைவைக் கேட்டு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மருத்துவமனை முன் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து கன்னடத்திரையுலகின் அத்தனை நட்சத்திரங்களும் மருத்துவமனை நோக்கி விரைந்துகொண்டுள்ளனர்.
48 இலவச பள்ளிக்கூடங்கள்,
26 ஆதரவற்றோர் இல்லங்கள்,
16 முதியோர் இல்லங்கள்,
1800 மாணவ, மாணவியரின் கல்வி,
என தன் வருமானத்தை தனக்காக மட்டுமில்லாமல் மக்களுக்கான பயனுக்காகவும் என வாழ்ந்து வந்த கன்னட திரையுலகின் மன்னன் புனித் ராஜ்குமார் வயது 46
இன்று தன் மரணத்திலும் தன் கண்களை தானமாக வழங்க அவர் ஏற்கனவே கண் தானம் செய்துள்ளார் என்கிற தகவல் வெளிவந்துள்ளது.
இப்படிப்பட்ட நல்ல உள்ளத்திற்கு இந்த இளம் வயதில் ஏற்பட்ட முடிவு சோகமானது.
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏