விகடன் தீபாவளி மலர்லருந்து தனிச்சுற்றுப் பத்திரிகை வரைக்கும்
எழுத்தாளர்ன்னா ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன்…
இன்னும் ஏம்ப்பா பிஞ்சு போன
ஒயரைப் புடிச்சே தொங்கிட்டிருக்கீங்க..
பாப்புலரிசம் என்பது நோய்
எழுத்து என்பது மயக்க மருந்தல்ல,
எழுத்தினூடான அரசியல் மிக முக்கியமானது..
ஜெயமோகன் மிக வெளிப்படையா
சங்கி அரசியல்ல நிக்கறவரு.. சரியாச் சொன்னா தமிழருக்கு எதிரான அரசியல்தான் அவருடைய கருத்தியல்
எஸ்.ரா.வை வெளிப்படையா அப்படிச் சொல்ல முடியாதுன்னாலும், அவரும்
ஒரு நுட்பமான அகண்ட பாரதம்தான்..
இதைச் சொன்னா படைப்பு வேறு.. அரசியல் வேறுன்னு இத்துப்போன வாதத்தைத் தூக்கிட்டு வருவாங்க…படைப்பும், படைப்பாளியும், அவன் அரசியலும் வேற வேற இல்லைங்கறது வேறங்கறவனுக்கும் தெரியும்,
பாப்புலரிசத்தை தாங்கற பாவப்பட்ட பத்திரிகைக்காரனுக்கு மட்டுந்தான்
இது தெரியாது..
இறுதியாச் சொல்றது இதுதான்..
பிராய்லர் கோழிகளுக்குத் தீனி போட்டுக்கிட்டிருக்கறத நிறுத்துங்க..
சிங்கவால் கொரங்கு மாதிரி
எதோ மூணு நாலு பேருதான் அபூர்வமா தமிழ்ல்ல எழுத்தாளர்ன்னு மிஞ்சி இருக்காங்க அப்படிங்கற எண்ணத்தை மாத்திக்கங்க, வேணும்ன்னா அவங்களுக்கு
சிலையை வச்சு தலைய முழுகிருவோம்…
காத்திரமான உள்ளடக்கமும்,
உறுதியான கருத்தியலும் கொண்ட
இளம் எழுத்தாளர்கள் நெறைய இருக்காங்க.. அவங்களைத் தேடிக்
கண்டு புடிங்க..
அவங்க ரோசக்காரங்க..
ஒருகாலத்துலயும் உங்களைத்
தேடி வரமாட்டாங்க…
-முகநூலில் எழுத்தாளர் கவிதா பாரதி