திடீர் உடல்நலக்குரைவு காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தீபாவளிக்கு ரிலீஸாவதாக இருந்த அவரது ‘அண்ணாத்த’ படம் ரிலீசாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சன் பிக்ஷர்ஸ் தயாரிப்பில் ரஜினி அவரது தங்காச்சி கீர்த்தி சுரேஷ் அவரது முறைபொண்ணுகள் மீனா குஷ்பூ நடித்த ‘அண்ணாத்த’படம் தீபாவளிக்கு ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வருங்கால முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்வதால், இப்படத்தின் வசூல் பாதிக்கப்படாவண்ணம் மற்ற படங்களின் ரிலீஸ் முடக்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை திடீரென ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் ‘அண்ணாத்த’ ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஜினிக்கு வேண்டாத சிலர் இந்த உடல்நிலை பாதிப்பு என்பதே படத்துக்கு பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று செய்தி பரப்பக்கூடும் என்று தங்களது மேம்பட்ட மனசாட்சிக்கு அஞ்சியே ரெட்ஜெயண்ட் இந்த முடிவை எடுக்கக்கூடும் என்று உடன்பிறப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.