நேற்று இரவு அமேஸான் ப்ரைம் தளத்தில் வெளியான சூர்யாவின் ‘ஜெய்பீம்’படம் மக்களிடையே பெரும் ஆரவாரமான வரவேற்பைப் பெற்றுள்ளது. சூர்யா இதுவரை நடித்த படங்களிலேயே ஆகச்சிறந்த படம் என்று ஒட்டுமொத்தமாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த அனைத்து பிரபலங்களும் ஜெய் பீம் படத்தை வானளாவ புகழ்ந்து வருகின்றன. இந்த வரிசையில் சற்றுமுன்னர் தனது முகநூல் பக்கத்தில், படத்தில் இறுதியில் போடப்பட்ட ஒரு மராத்திய கவிதையின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித்,…Pa Ranjith
சாதி எதிர்ப்பையும்,சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே….
இதோ மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதை போல பலகதைகள் இனி வரும்.
அது நம் தலைமுறையை மாற்றும்.
ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த திரு Suriya Sivakumar மற்றும்
குழுவினருக்கு பெரும் நன்றிகள்!
#JaiBhim… என்று மனதாரப் பாராட்டியுள்ளார்.