பொதுமக்கள் மத்தியில் காவல் துறையினர் பெரும்பாலும் கெட்ட பெயரையே சம்பாதித்து வரும் நிலையில் பெண் ஆய்வாளர் ஒருவர் தனது மனிதாபின செயலால் ஒரே நாளில் இந்தியா முழுக்க ட்ரெண்டிங் ஆனார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உலகநாயகன் கமல் தொடங்கி அனைவரும் தங்கள் பாராடுக்களை தெரிவித்துவருகின்றனர்.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையின் காரணமாக மாநிலம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது… பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 7ம் தேதி முதல் நேரடியாக தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிட அலுவலர்களுக்கும் உத்தரவிட்டு வருகிறார்..
அதேபோல காற்றின் காரணமாக அறுந்து விழுந்துள்ள மின்கம்பிகள், மரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் மாநாகராட்சி அதிகாரிகள், போலீசார், மின்வாரிய அதிகாரிகள், தன்னார்வலர்கள் போன்றோர் முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்…
இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில், நேற்றைய தினம், இறந்துவிட்டதாக கருதப்பட்ட ஒருவரை தோளில் தூக்கி போட்டு அவரது உயிரை காப்பாற்றிய பெண் போலீஸ் ராஜேஸ்வரி தமிழக மக்களின் கவனத்தையும் மொத்தமாக ஈர்த்தார்… சென்னை கீழ்ப்பாக்கம் டி.பி. சத்திரம் கல்லறையின் ஊழியர் உதயா.. இவர் கனமழை காரணமாக கல்லறையிலேயே நேற்று முன்தினம் இரவு தங்கியுள்ளார்.. மரங்கள் விழுந்தன தொடர்ந்து மழையில் நனைந்து கொண்டும் இருந்திருக்கிறார்.. ஏற்கனவே உடல்நலம் சரியில்லாத நிலையில், அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.. அந்த கல்லறை பகுதியிலேயே இரவு நேரத்தில் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன..
நேற்று காலை அந்த பகுதி மக்கள் இதை பார்த்து அதிர்ந்து போனார்கள். மது போதையால், உதயா அசையாமல் இருந்ததால், உயிரிழந்தார் என்று நினைத்து போலீசுக்கு தகவல் அளித்தனர்… ஆட்டோ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர் உயிருடன் இருப்பதை அறிந்து, தாமே தனது தோளில் சுமந்து சென்று ஒரு ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உதயாவை அனுப்பி வைத்துள்ளார். சரியான நேரத்தில் வந்து உதயாவை தோளில் சுமந்து உயிரைக் காத்த ராஜேஸ்வரிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தொடர் மழை – அளவுக்கதிகமான நீர்வரத்து காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது துயர்துடைக்கப் பணியாற்றும் காவல்துறையினர், மின்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன். பாராட்டுக்கள் தன்னலம் பாராத உங்களது சேவையாலும் தியாகத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் துயர் துடைக்கப்படுகிறது. இயல்பு நிலை முழுமையாக விரைந்து திரும்ப அனைவரும் சேர்ந்து உழைப்போம்! மக்களைக் காப்போம்! உங்கள் தியாகம் விலைமதிப்பில்லாதது! உங்கள் சேவை மகத்தானது! உங்கள் உள்ளத்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று முதல்வர் பதிவிட்டுள்ளார்.
வெறுமனே வாழ்த்துத் தெரிவித்ததோடு நில்லாமல் ஆய்வாளர் ராஜேஷ்வரியை நேரில் சந்தித்து தன் கைப்பட எழுதிய பாராட்டு கடிதத்தையும் முதல்வர் வழங்கினார். இதுபோல சமூக வலைதளங்கள் முழுக்க,…’இவர்தாண்டா உண்மையான வைஜெயந்தி ஐ.பி.எஸ்’என்று பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.