வேறு புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் சுமார் எட்டு மாதங்களுக்கும் மேல் காத்திருந்த விக்ரமின் புதல்வர் துருவ் விக்ரமைக் கழட்டி விட்டுவிட்டு வருங்கால முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் கைகோர்த்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். மாரி செல்வராஜ் அடித்த இந்த சந்தர்ப்பவாத பல்டியால் பெரும் அப்செட்டுக்கு ஆளாகியிருகிறார்கள் சீயானும் இளைய சீயானும்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு கோடம்பாக்கத்தில் ஏகப்பட்ட காட்சி மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் பல முக்கிய படங்களை வளைத்துப்பிடித்து வருகிறது. அதே தியேட்டர்கள் ஏரியாவிலும் சன் பிக்ஷர்ஸ், மற்றும் ரெட்ஜெயண்ட் நிறுவனங்களுக்கே முன்னுரிமைகள் வழங்கப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக உதயநிதி தயாரிப்பு மற்றும் அவரது நடிப்பு முன்னேற்றத்துக்கும் சில ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் அடுத்து எந்த இயக்குநர் படத்தில் நடித்தால் உதயண்ணா ஓரளவுக்காவது நடிக்கக் கற்றுக்கொள்ள முடியும் என்று ஆலோசிக்கப்பட்டதன் அடிப்படையில் மாரி செல்வராஜ் பெயர் டிக் அடிக்கப்பட்டு உதயை இயக்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
பெரிய முதலாளி, மிகப்பெரிய சம்பளம், படத்துக்கு இஷடத்துக்கு செலவு செய்யலாம் என்கிறபோது மாரிக்கு கசக்கவா செய்யும்? இதை ஒட்டி ஏற்கனவே வேலைகள் நடந்துகொண்டிருந்த துருவ் விக்ரம் படத்தை மூட்டை கட்டி தனது அலுவலக பரணில் போட்டுவிட்டு உதயண்ணா படத்துக்கு வந்துவிட்டார் மாரி செல்வராஜ். இப்படத்தில் ஃபகத் பாசிலும், உதயண்ணாவே நன்றாக காமெடி பண்ணுவார் என்பதால் ஒரு குணச்சித்திர வேடத்தில் வடிவேலுவும் நடிக்கிறார்கள்