கொரோனாவின் புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் வைரஸ் போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் டெல்டா வைரஸை விட வேகமாக, காற்றில் பரவ வாய்ப்புள்ளது. B.1.1.529 என்ற பெயருடைய உருமாறிய இந்த ஓமைக்ரான் கொரோனா வைரஸ், டெல்டா வைரஸைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தக் கூடியலாம் என்று கவலை தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள்.
இதனால் உலக நாடுகள் தென்னாப்பிரிக்கா உள்பட ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து தங்கள் நாடுகளுக்கு விமான சேவைக்கு தடை வித்துள்ளன. இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன. ஓமிக்ரான் வைரசால் இந்தியாவும் உஷராகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளிடம் இருந்து வருபவர்களை பரிசோதிக்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தப் புதிய வைரஸ் எவ்வளவு ஆபத்தானது என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துவருகிறார்கள்.
தென்னாப்பிரிக்கா, போஸ்ட்வானா, சீனா, இஸ்ரேல், பெல்ஜியம் என இந்த உலகை அச்சுறுத்தும் ஓமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. டெல்டா வைரஸிருந்து 32 உருமாற்றங்கள் அடைந்துள்ளதாக ஒமிக்ரான் வைரஸ் உள்ளது என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து விமானங்களை தனது நாட்டினுள் நுழைய தடை செய்துள்ளது அமெரிக்கா.
தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளைக் கண்காணிக்கவும், பரிசோதனை செய்யவும் புதிய அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வரும் பயணிகளை தெர்மல் ஸ்கேனிங் செய்து காய்ச்சல் இருப்பதை பார்க்கிறார்கள். இரண்டு தடுப்பூசிகளை போட்ட ஸர்ட்டிபிகேட் காட்டினால் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கிறார்கள் என்றார்.
2 தடுப்பூசி போட்டாலும் ஓமிக்ரான் கொரோனா வருவது பற்றி என்ன பதில் என்று தெரியவில்லை. ஆயினும் அமெரிக்கா போல, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வரும் விமானங்களை தடை செய்யவில்லை இந்தியா.
ஏன் என்று கேட்கிறீர்களா ?
அப்போ தானே புதிய தொற்றும் பரவ முடியும் ?! நிறுவனங்கள் கல்லா கட்ட முடியும் ?! 2 ஊசிகள் போக அடுத்து பூஸ்டர் ஊசி போட நிர்ப்பந்திக்க முடியும் ?!