கொரோனா தாக்குதலால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் சற்றுமுன்னர் காலமானார்.

இந்திய சினிமா உலகில் சீனியர் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர்.. இவர் நடிகரும்கூட.. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி கன்னடம் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார்.

டான்ஸ் மாஸ்டராக மட்டும் 1300 படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து உள்ளார்… இவரது பாடி லேங்குவேஜ் மற்றும் டயலாக் உச்சரிப்புக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

மேலும், ஜப்பான் உள்ளிட்ட 10 மொழி படங்களில் டான்ஸ் இயக்குனராக பணியாற்றி உள்ளார்.. இந்நிலையில் இவருக்கு திடீரென கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது.. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவசங்கர், அவரது மனைவி, மூத்த மகன் என 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.. அதனால், 3 பேருமே சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள AlG மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார்கள்.

இதில், சிவசங்கர் மாஸ்டர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார்.. அவர் மிகவும் ஆபத்தான நிலைமையில் இருந்ததாகக் கூறப்பட்டது.. இவரது சிகிச்சைக்கு அதிக செலவு ஆகும் என்று டாக்டர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.. ஆனால், அந்த சிகிச்சைக்கான கட்டணத்தை அவருடைய குடும்பத்தினரால் செலுத்த முடியவில்லை.

எனவே, சிவசங்கர் மாஸ்டரின் இளைய மகன் ஒரு கோரிக்கையை சோஷியல் மீடியாவில் வைத்திருந்தார். அதில், என்னுடைய அப்பா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்… எங்களிடம் சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லை… அதனால் அவருக்கு தயவுசெய்து உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.. இதையடுத்து, பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் சிகிச்சை செலவுக்கு உதவி செய்வதாக முன் வந்துள்ளார். நடிகர் தனுஷும் உதவ முன் வந்தார்.

இந்நிலையில் சற்றுமுன்னர் வந்த தகவல்களின்படி சிகிச்சை பலனின்றி சிவசங்கர் மாஸ்டர் காலமானார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.