ஐந்து பெண்கள். ஒரு பார்ட்டியில் சந்திக்கிறார்கள் . எல்லோருக்கும் இடுப்பில் ஒரு மீன் மச்சம் . அம்மாக்கள்தான் வேறு. அப்பா ஒரே ஆளு . அவர் ஊரில் மிகப்பெரிய புள்ளி. அஞ்சு பேரையும் ஏமாத்தி இருக்கார் . இவர்கள் அவரை பழி வாங்க முடிவெடுக்கிறார்கள்.
பெரிய புள்ளி க்கு ஒரு மகன். அவனுக்கும் அஞ்சு பேரில் ஒருத்திக்கும் காதல். மேட்டர் வரை போய் போய் தடங்கல் ஆகி விடுகிறது. இரண்டு பேருக்கும் தாங்கள் சகோதர முறை என்று உண்மை தெரிந்தும் காதல் நோய் வாட்டி எடுக்க , ஒரே ஒரு முறை மேட்டர் செய்து விட்டு ஒதுங்கி விடலாமென்று மேட்டரும் முடிகிறது. அஞ்சு சகோதரிகளில் ஒருத்தி பெரிய புள்ளியின் மனைவியின் சொந்த சகோதரி மகள் என்கிற ஒரு ட்விஸ்டும் உண்டு. பெரிய புள்ளி கில்ட்டி தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்.
இப்போது மெயின் ட்விஸ்ட்.. பெரிய புள்ளியின் அப்பாதான் சூத்ரதாரி. அவரிடம் அடியாளாய் இருக்கும் ஒருவனை அஞ்சு சகோதரிகளும் அம்மணமாக கட்டி வைத்து அடிக்கும்போது பார்த்தால் அவனுக்கும் அதே போல் ஒரு மச்சம் . அவன் யாரென்றால் பெரியபுள்ளியின் தம்பி. அன் அஃபிஷியல் தம்பி.. அதாவது வேலைக்காரிக்கு பிறந்தாவனாம்.
இப் போது சகோதரியுடன் மேட்டர் செய்த தம்பி உண் மையில் பெரிய புள்ளிக்கு பிறந்தவர் இல்லை என்று அவன் அம்மா சொல்கிறார். அவன் அப்பா யாரென்றால் பெரிய புள்ளியின் அண்ணனேதான். அவர்கள் இருவரும் ஏற்கனவே காதலர்களாம் . இப்போது ரூட் க்ளியர் ஆச்சா? மேட்டர் சூடு பறக்குது..
இது ஒரு ஸ்பானிஷ் சீரிஸ்..The Five Juana’s..
தமிழில் ரீமேக் செஞ்சா எப்படியிருக்கும்😄
முகநூல் வழியாக ஆலோசனை வழங்கியிருப்பவர் எழுத்தாளர்,வசனகர்த்தா,வருங்கால இயக்குநர் மணி ஜி.