கடந்த சில வாரங்களாக தனது ‘வலிமை’படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மீது செம டென்சனில் இருக்கும் அஜீத் அவரை மறைமுகமாகக் குறிக்கும் வகையில்,…மனிதரிடம் இருக்கும் பணத்தை வைத்து யாரையும் மதிப்பிடாதீர்கள்.அவர்களது குணத்துக்கு மட்டுமே மதிப்பு கொடுக்க வேண்டும்’ என்று கோபமாக பதிவிட்டுள்ளார்.

வலிமை படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்துள்ள ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

வலிமை படத்தில் அஜித்தின் சகோதரராக நடித்துள்ள ராஜ் ஐயப்பா, நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஜித்திடம் அனுமதி பெற்ற பின்னரே இதனை பகிர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த ஸ்டேட்டஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “ஏழை, நடுத்தரவர்க்கம், பணக்காரர் என்பது ஒரு தனி நபரின் பொருளாதார நிலையை குறிக்கிறதே தவிர அவரது குணத்தை அல்ல. சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். அதனால் ஒரு நபரின் பொருளாதார நிலையை வைத்து குணத்தை மதிப்பிடுவதை நாம் நிறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அஜீத்தின் இப்பதிவு நேரடியாக போனி கபூருக்கானதுதான் என்று வலிமையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.