பிரபல திரைப்பட நடிகர் ஆர்.என்.ஆர் மனோகர் மாரடைப்பால் காலமானார்.அவருக்கு வயது 54.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் மனோகர் ஆவார்.
இவர் மாசிலாமணி, வேலூர் மாவட்டம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லன்,மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
நடிகர் அஜித்துடன் வீரம், வேதாளம், விஸ்வாசம், என்னை அறிந்தால் படங்களில் நடித்துள்ளார் மனோகர். மேலும் தில், சலீம், கவண், ஆண்டவன் கட்டளை, காஞ்சனா 3, சீறு, பூமி, காப்பான் போன்ற பல படங்களில் வில்லன் வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்களிடையே புகழ்பெற்றுள்ளார்.
இந்த நிலையில் புற்றுநோய்ப் பாதிப்பால் சில வருடங்களாகப் போராடி வந்த மனோகர் இன்று காலை ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சில வருடங்களுக்கு முன் இவரது இளம் வயது மகன் தனியார் பள்ளி ஒன்றின் நீச்சல் குளத்தில் இறந்த சோக சம்பவமும் நடந்தது.