மெல்லிசை மன்னர்களுக்கு மத்தியில் மெல்ல இசையமைப்பவர் என்று பெயரெடுத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அவரிடம் இசை கேட்டுச் செல்பவர்கள், கொஞ்சம் அவசரப்பட்டால் கூட தூக்கிக்கொண்டு வேறு யாரிடமாவது சென்று விடுங்கள்’என்று கெயெடுத்துக் கும்பிடுபவர் என்பதும் இண்டஸ்ட்ரி அறிந்த சங்கதி.
இந்நிலையில், மிக அண்மையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு மனம் திறந்த பேட்டி அளித்துள்ள ஏ.ஆர்.ஆர் ரஜினி படங்களுக்கு இசையமைத்தபோது நரகவேதனையை அனுபவித்தேன்’ என்று மிக வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவரது பேட்டியில்,…’ரஜினியின் ‘முத்து’,’படையப்பா’ எந்திரன்’ எந்திரந்2’படங்களுக்கு இசையமைத்தபோது மனதளவில் மிகவும் சிரமப்பட்டேன். அப்படங்களுக்கு என் மனம் போன போக்கில் இசையமைக்க முடியவில்லை. அப்படங்களை ஒப்பந்தம் செய்ய வரும்போதே தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இது தீபாவளி ரிலீஸ், பொங்கல் ரிலீஸ் அதனால் சீக்கிரம் முடித்துத்தரவேண்டும் என்று அவசரப்படுத்துவார்கள். அதனால் மிக நெருக்கடியான மனநிலையில், உண்மையைச் சொல்வதென்றால் ஒருவித நரகவேதனையுடன் தான் அப்படங்களுக்கு இசையமைத்தேன். அச்சமயங்களில் தீபாவளி,பொங்கல்,ரம்ஜான் போன்ற எந்தப் பண்டிகையையும் கொண்டாடக்கூட எனக்கு நேரம் இருந்ததே இல்லை என்பதும் அந்த வேதனைக்குக் காரணம்.
இப்படி ரஜினி படத்துக்கு குறிப்பிட்ட சமயத்தில் முடிக்கவேண்டிய கட்டாயத்தால் மற்ற இயக்குநர்களிடம் கெட்டபெயர் வாங்கவேண்டிய நிலயும் கூட ஏற்பட்டது.
மற்றபடி ஒரு சூப்பர் ஸ்டாராக இவ்வளவு காலம் தாக்குப்பிடித்தவர் என்கிற முறையிலும் அவரது பக்தி மார்க்கமும் எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்று கூறியிருக்கிறார் ரஹ்மான்.