பொதுவாக ஜாலியான காக்டெயில் படங்களையே அதிகம் இயக்கிவந்த வெங்கட் பிரபு இம்முறை கொஞ்சம் சீரியஸான பாலிடிக்ஸ் படம் ஒன்றைக் கையிலெடுத்திருக்கிறார். வருங்கால முதல்வர் கனவுகளில் மிதக்கும் நடிகர்களுல் ஒருவரான சிம்பு நிகழ்கால முதல்வர் ஒருவரை காப்பாற்றுவதுதான் கதை.
அதை Time-loop என்ற கான்செப்டில் கலக்கியிருக்கிறார்கள்.
துபாயில் பணியாற்றும் அப்துல் காலிக் (சிம்பு) நண்பனின் திருமணத்திற்காக கோயம்புத்தூருக்கு வருகிறார். திருமணம் செய்யப்போகும் பெண்ணையும் அவளைக் காதலித்த தன் நண்பனையும் சேர்த்துவைப்பதுதான் காலிக்கின் திட்டம். திட்டமிட்டபடி திருமணப் பெண்ணைக் கடத்தி நண்பனுக்கு திருமணம் செய்துவைக்கப் போகும்போது, ஒரு விபத்து நடந்துவிடுகிறது.
அதில் ஏற்படும் பிரச்னையில் இருந்து விடுபட வேண்டுமானால் முதலமைச்சரைக் கொல்ல வேண்டுமெனக் கூறுகிறார் காவல்துறை அதிகாரியான தனுஷ்கோடி (எஸ்.ஜே. சூர்யா). முதலமைச்சரைக் கொன்று விடுகிறான் அப்துல் காலிக். பிறகு காவல்துறை அவனைக் கொன்றுவிடுகிறது. சட்டென விழித்துப் பார்த்தால், காலிக் மீண்டும் விமானத்தில் இருக்கிறான்.
அப்போதுதான் தான் ஒரு Time – loopல் சிக்கியிருப்பது அவனுக்குப் புரிகிறது. இதையடுத்து தானும் தப்பிக்க வேண்டும், முதலமைச்சரும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக காலிக் மேற்கொள்ளும் முயற்சிகளே மீதிப் படம்.
காலிக் இறந்துவிட்டால், கதை மீண்டும் முதலில் இருந்து துவங்கும். முதலமைச்சரைக் காப்பாற்றும் முயற்சியில் தோல்வியடைந்தால், காலிக் சாக வேண்டும். அப்போதுதான் அவனால் முதலில் இருந்து மீண்டும் காப்பாற்றும் முயற்சியைத் துவங்க முடியும்.
இந்த விஷயம் வில்லனுக்குத் தெரிந்துவிடுவதால், காலிக்கை சாகவிடமாட்டான். இப்படி ஒரு சிக்கலான காலப் பயணத்திற்குள் நடக்கும் ஓர் ஆடு – புலி ஆட்டம்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.
ரொம்பவும் சிக்கலான, அதே சமயம் கரணம் தப்பினால் மரணம் என்று ஆகிவிடக்கூடிய ஆபத்தான கதை. இந்த மரணச்ம்தான் ந்கடந்த வாரம் ரிலீசான ‘ஜாங்கோ’படத்துக்கு நடந்தது ]
ஆனால் எந்த இடத்திலும் குழப்பமே ஏற்படுத்தாமல் திரைக்கதையில் சடுகுடு ஆடியிருக்கிறார் வெங்கட் பிரபு. இக்கதை இவ்வளவு கச்சிதமாக திரைவசப்படக்காரமாக பாராட்டப்படவேண்டிய முதல் கலைஞர் படத்தொகுப்பை செய்திருக்கும் கே.எல். பிரவீண். அடுத்து அடித்து ஆடியிருப்பவர் பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கும் யுவன் ஷங்கர் ராஜா.
படத்தில் சில டஜன் நடிகர்கள் இருந்தாலும் சிம்பு – எஸ்.ஜே. சூர்யா ஆகிய இருவர்தான் கதையின் மையம். ஓர் இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் சிம்பு, வம்பு வேலைகள் எதிலும் ஈடுபடாமல் சிரத்தையாக நடித்திருக்கிறாஅர். ஆனால், அதிகம் ஸ்கோர் செய்து ஆக்கிரமித்து நிற்பவர் எஸ்.ஜே. சூர்யாதான். லைட்டாக நட்டு கழண்டவர் போல வேடம்தான் இப்படத்திலும்.
இவர்கள் தவிர ஒய்.ஜி. மகேந்திரனுக்கும் பெயர் சொல்லும்வகையில் ஒரு படம் இது. இவர்கள் தவிர, மனோஜ், உதயா, வாகை சந்திரசேகர் போன்ற வாய்ப்பு கிடைக்காத நடிகர்கள் சங்க வாலிபர்கள் பலபேருக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கிறார் இயக்குநர். பிரேம்ஜியும் உண்டு.
குறிப்பாக சொல்ல வேண்டிய இன்னொரு சமாச்சாரம்…மற்ற இயக்குநர்களிடம் இல்லாத ஒரு நேர்மை வெங்கட் பிரபுவிடம் அளவுக்கு அதிகமாகவே உள்ளது. அது எந்தெந்த படங்களில் இருந்து இந்தப் படம் காப்பி அடிக்கப்பட்டது என்பதை அவரே சில காட்சிகளில் சொல்லியிருப்பது…