பயாஸ்கோப் என்ற திரைப்படம் இன்று கண்டேன். சினிமா என்பதைக் குடிசைத் தொழில் போல மாற்றிக்காட்டிய மாயவித்தை இந்தப் படத்திலே நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
வயதான கிராமத்து பாட்டிகள்… அதிலே ஒரு பாட்டி டைரக்டர். ஒரு பாட்டி கேமராமேன். ஒரு சினிமாவை உருவாக்குவது நெல்லை விளைவிப்பதை விடவும் அபூர்வமான வேலை இல்லை என்பதை இயல்பாக உணர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
வெங்காயம் என்ற திரைப்படத்தை உருவாக்கிய சங்ககிரி ராஜ்குமாரின் அடுத்த படைப்பு இது. படத்தை உருவாக்கி, வெளியிட்டு அவர் செய்த சாதனையைத்தான் பயாஸ்கோப் என்ற பெயரில் காவியம் ஆகியிருக்கிறார். ஐந்தாறு கிராமத்து பையன்கள், பக்கத்து வீட்டில் குடியிருக்கிற கூலி விவசாயிகள் இவர்கள்தான் நடிகர்கள். பல படைப்பாளிகள் உருவாவதற்கு இந்தப்படம் துணிச்சலை ஏற்படுத்தும். வாழ்த்துக்கள் ராஜ்குமார்.
உங்கள் உழைப்பை உலகம் போற்றும் காலம் வரும். One திரைப்படம் உலகில் யாருமே செய்ய முடியாத சாதனை. ஒருவகையில் இதுவும் அப்படித்தான். என்ன இதில் ஆச்சரியம் என்றால் உங்கள் சாதனைகளைப் புரிந்து கொள்வதற்கு கூட இன்னும் பலர் தயாராக இல்லை. நல்ல மனிதனாகவும் நல்ல திறமைசாலியாகவும் கடுமையான உழைப்பாளியாகவும் இருக்கிற உங்களைப் போன்ற ஒருவரே உங்கள் சாதனையை முறியடிக்க முடியும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
முகநூலில் எழுத்தாளர் தமிழ்மகன்