67 வது பிறந்தநாளில் அடியெடுத்துவைத்திருக்கும் கமல், அதே பிறந்தநாளன்று ஒரு மெகா கூட்டணிக்கும் அடித்தளம் போட்டிருக்கிறார். அந்த இயக்குநர் பா.ரஞ்சித். இவர்கள் இருவரும் சந்தித்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.
லோகேஷ் கனகராஜுடன் ‘விக்ரம்’படத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் கமல் தனது பிறந்த தின ‘பிக்பாஸ்’சர்ப்ரைஸாக அதன் டீஸ்ரையும் வெளியிட்டார். அதே பிறந்த நாளன்று திரையுலகைச் சேர்ந்த 200 பேருக்கு மட்டும் கமலுடன் விருந்துண்ண அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த விருந்தாளிகளில் ஒருவராக வந்த பா.ரஞ்சித், தன்னிடமிருந்த கமலுக்கான கதையை ஒரு சில நிமிடங்களில் சொல்லி முடிக்க அதிர்ந்து போன கமல், ‘இந்த படத்தை நாம ஏன் லேட்டா பண்ணுனும். உடனே பண்ணலாமே?’ என்றபடி ‘22 மார்ச் முதல் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் என்றபடி கைகுலுக்கினாராம்.
‘விக்ரம்2’,’பஞ்சாயத்தில் இருக்கும் ‘இந்தியன் 2’ படங்களுக்கு அடுத்து கமல் நடிக்கவிருப்பது பா.ரஞ்சித் படத்தில்தான். இதனால் பாதிக்கப்பட்டிருப்பவர் இயக்குநர் வெற்றிமாறன் தான். கமலின் மார்ச், ஏப்ரல், மே மாத தேதிகள் ஏற்கனவே வெற்றிமாறனுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன.
இப்போது நம் தமிழ் சினிமாவில் தலித், இருளர், ஒட்டர் போன்ற பின் தங்கிய மக்கள் சப்ஜெக்ட் சூப்பர் ஹிட் அடித்து நல்ல துட்டு பார்ப்பதால் நம்மவருக்கும் பழங்குடி வேஷம் கட்ட ஆசை வந்துடுத்து…