அமீரின் அமீர் ஃபிலிம் கார்ப்பரேஷனும், ஜேஎஸ்எம் பிக்சர்ஸும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. தயாரிப்பு, நடிப்புடன் அமீர் ஒதுங்கிக் கொள்ள ரமேஷ் கிருஷ்ணன் படத்தை இயக்குகிறார்.
ஆர்யாவும், அவரது தம்பி சத்யாவும் இணைந்து நடிக்க தனது இயக்கத்தில் சந்தனத்தேவன் என்ற படத்தை அமீர் தொடங்கியது நினைவிருக்கலாம். இப்போது அந்தப் படத்தில் அமீரே நாயகனாக நடிக்கிறார்.
மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் என்ற இந்த கிராஃப் எத்தனை சிறப்பானது. இப்படியொரு பட வரிசை தமிழில் எத்தனை இயக்குனர்களுக்கு இருக்கிறது. சிவகுமார் குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், நானும் ஹீரோவாகிறேன் என்று வீம்பாக நடிக்கப் போய் தமிழ் சினிமா அமீர் என்ற திறமையான இயக்குனரை தவறவிட்டது. அவர் திரும்பி வருவதற்கான அறிகுறி கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை.
ஆரம்பத்திலேயே நின்று போன சந்தனத்தேவன் படத்தை மீண்டும் அமீர் தூசு தட்டுகிறார். இந்தப் படத்தில் ஆர்யாவுக்குப் பதில் அமீரே நடிக்கிறார். ஆர்யாவின் தம்பி சத்யா நடிப்பதாக இருந்த வேடத்தில் சத்யாவையே ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்களுடன் சஞ்சிதா ஷெட்டி, வின்சென்ட் அசோகன், தீனா, சரண், தயா செந்தில் குமார் உள்பட பலர் நடிக்கின்றனர்.
அமீர் இயக்கிய முதல் மூன்று படங்களுக்குமே ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். அமீரின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் இசையமைக்க, சினேகன் பாடல்களை எழுதுகிறார். ஏற்கனவே ஒரு பாடல் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் படத்தின் போட்டோஷுட்டும் நடத்தப்பட்டது.
அமீரின் அமீர் ஃபிலிம் கார்ப்பரேஷனும், ஜேஎஸ்எம் பிக்சர்ஸும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. தயாரிப்பு, நடிப்புடன் அமீர் ஒதுங்கிக் கொள்ள ரமேஷ் கிருஷ்ணன் படத்தை இயக்குகிறார். இவர் அதர்மம், பகைவன் படங்களை இயக்கியவர். சந்தனத்தேவன் என்ற பெயர் பழையது என்பதால் படப்பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளனர்.