சமீப சில வாரங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் சென்சார் ஆகியுள்ள நிலையில் அவற்றில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்கள் இந்த டிசம்பரிலேயே ரிலீஸாகவிருப்பதாகத் தெரிகிறது.
வரும் வெள்ளியன்று [10ம் தேதி] ஜீ.வி.பிரகாஷ் வசந்த பாலன் கூட்டணியின் ஜெயில், பாக்கியராஜின் ராசியில்லா ராஜா சாந்தனு நடித்துள்ள ‘முருங்கைக்காய் சிப்ஸ், பிரபுதேவா கடிக்கவிடப்போகும்’தேள்’, சாயம் வெளுக்கப்போகிறதா அல்லது அவரது சானல் இன்னும் செழிக்கப்போகிறதா என்பதற்கான பதிலை வைத்திருக்கும் ப்ளூ சட்டை மாறனின் ‘ஆண்டி இண்டியன்’,நடன இயக்குநர் சாண்டி, கவுதம் மேனன் நடித்திருக்கும் ‘3.33’, ‘நெல்லை சந்திப்பு’ இயக்குநர் நவீன் கிருஷ்ணாவின் இயக்கத்தில் த்ரில்லர் படமான ‘உத்ரா’ டைட்டிலைக் கேட்டால பக் கென தோணும் ‘க்’ கருத்து சொல்ல ஒரு தகவலும் கிடைக்காத ‘மட்டி’ உள்ளிட்ட 11 படங்கள் ரிலீஸாகின்றன,
இதே போல் இதற்கு அடுத்த வெள்ளிகளான 17, 24 தேதிகளிலும் விஜய் சேதுபதி, மணிகண்டன் கூட்டணியின் ‘கடைசி விவசாயி’, பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஃப்ராங்ளின் இயக்கியுள்ள ‘ரைட்டர்’ உள்ளிட்ட இரண்டு டஜன் படங்கள் ரிலீஸாக உள்ளதாகத் தெரிகிறது.
இந்த ரிலீஸ்களின் அத்தனை படங்களையும் ப்ரஸ் ஷோக்களில் பார்த்தே தீரவேண்டிய சினிமா பத்திரிகையாளர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.