ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் கட்சியில் பத்து முதல் பதினந்து பேர்வரை மட்டுமே உறுப்பினராக உள்ள பா.ஜ.கவை தமிழகத்தில் வளர்ந்து விடுவதற்கு கோடிகளில் கட்டிங் வாங்கியவர்களுல் ஒருவர்தான் ப்ளூ சட்டை மாறன் என்ற சந்தேகம் எப்போதுமே நமக்கு உண்டு. ஏனென்றால் தனது விமர்சனங்களில் எதிர்மறையாகப் பேசுவதுபோல் பா.ஜ.கவை வம்பிழுப்பதுபோல் அக்கட்சிக்கு ஒரு விளம்பரத்தைக் கொடுத்துக்கொண்டே இருப்பார்.
அதன் அடுத்த லெவல் புராஜக்ட்தான் இந்த ‘ஆன்டி இண்டியன்’படம். படத்தை கொஞ்சம் கவனமாகப் பார்த்தால் அது எவ்வளவு அப்பட்டமான பா.ஜ.க.படம் என்பது புரியும். இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு மனநிலையை உண்டாக்கும் பல காட்சிகள் படத்தில் உண்டு.
குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில், அவ்வளவு பஞ்சாயத்துக்குப் பிறகும் அந்த பாட்ஷா பாயை வலுக்கட்டாயமாக சுன்னத் பண்ணித்தான் அடக்கம் செய்தார்கள் என்று ஒரு மிக ஆபத்தான கருத்தை ரத்தமும் சதையுமாகக் கூறியிருப்பார்.
இந்நிலையில் இன்று ஒரு அறிக்கை தனது பா.ஜ.க. முகமூடியை வெளியே அப்பட்டமாகக் காட்டிவிட்டார். அதாவது நேற்று ரிலீஸான ஆ.இண்டியன்’ சுத்தமாகக் கல்லா கட்டவில்லை. பார்த்த ஒரு சிலருக்கும் படம் பிடிக்கவில்லை. இப்படியே விட்டால் ஞாயிறோடு படத்தை தூக்கிவிடுவார்கள் என்று யோசித்தவர் தனது கட்சியினர் சிலரைத்தூண்டிவிட்டு ‘படத்தைத் திரையிடாதே’ என்று கோச்ஜ்ஹமெழுப்ப வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
ஆன்டி இண்டியனை திரையிடக்கூடாது – பாஜக எச்சரிக்கை.
மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா தயாரிப்பில் ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் திரைப்படம் உலகெங்கும் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் பார்வதி தியேட்டரில் நேற்று இரவுக்காட்சி நடந்த சமயத்தில் நுழைந்த பாஜக கட்சியை சேர்ந்த சுமார் பத்து பேர் ‘இப்படம் இந்துக்களை இழிவு படுத்துவதாலும், எங்கள் கட்சி கொள்கைக்கு எதிராக உள்ளதாலும் இப்படத்தை திரையிடக்கூடாது’ என்று கோஷமிட்டனர்.
ஆகவே அக்காட்சி நிறுத்தப்பட்டு, படம் பார்க்க வந்த ரசிகர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும் அங்கிருந்த ஆன்டி இண்டியன் பேனரை கீழே இறக்க வேண்டுமென மிரட்டல் விடுக்கவே.. அந்த பேனர் இறக்கி வைக்கப்பட்டது.
மேலும் இப்படத்தை மறுநாளும் திரையிடக்கூடாது என்று எச்சரித்து விட்டு சென்றுள்ளனர். ஆகவே அடுத்த காட்சிகள் அங்கு திரையிடப்படவில்லை.
இதுகுறித்து ஆன்டி இண்டியன் படத்தின் இயக்குனர் ப்ளூ ஷர்ட் மாறனிடம் கேட்டபோது..
‘உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தணிக்கை செய்யப்பட்டு வெளியான இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடக்கூடாது என்று மிரட்டல் விடுப்பது கருத்து சுதந்திர ஜனநாயகத்திற்கு எதிரானது.
எனவே நாங்கள் இதுகுறித்து காவல்துறை உயரதிகாரியிடம் புகார் செய்துள்ளோம். மேலும் இப்படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டுள்ளோம்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் தனது கட்சி ஆதரவாளர் ப்ளூ சட்டையாருக்காக பா.ஜ.க.செய்யும் பிரதியுபகாரமே அன்றி வேறில்லை. இச்செய்தி பரபரப்பானால் பா.ஜ.கவும் வளரும் படத்தின் கலெக்ஷனும் மலரும் என்பது அவர்களது திட்டம்.
பி.கு; இப்படி மாய்ந்து மாய்ந்து எழுதப்பட்ட இச்செய்தியும் ஒரு விளம்பரச்செய்திதான்…