” கைலா ” படத்தை தொடர்ந்து பூதோ பாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு ” தோப்புக்கரணம் ” என்று சுவாரஸ்யமாக தலைப்பிட்டுள்ளனர்.
கோகன், அக்ஷய், நிரஞ்சன், ரிஷி, சந்துரு ஆகிய ஐந்து புதுமுகங்கள் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர்.படத்தின் கதாநாயகியாக தர்ஷிணி டெல்டா அறிமுகமாகிறார். இவர் நடன இயக்குனர் பிரபு தேவாவிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் படத்தின் தயாரிப்பாளர் பாஸ்கர் சீனுவாசன், மிஸ்டர் இண்டியா ஸ்டீவ் ஆகிய இருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.
தயாரிப்பாளர் பாஸ்கர் சீனுவாசன் தற்போது நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கராத்தே பிரிவில் நடுவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் பற்றி இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன் பகிர்ந்தவை…
இஞ்சினியரிங் முடித்து விட்டு வேலை இல்லாமல் சுற்றி திரியும் 5 இளைஞர்கள் அந்த ஏரியாவில் தாதாவாக வலம் வரும் வரதனிடம் வேலைக்கு சேர முயற்சிக்கிறார்கள். ஒரு சூழ்நிலையில் தாதா வரதன் கடுப்பாகி இந்த ஐந்து பேரை நடு ரோட்டில் தோப்புக்கரணம் போட வைக்கிறான்
அதனால் அவமானத்திற்குள்ளான அந்த 5 பேரும் இறுதியில் தாதா வரதனை தோப்புக்கரணம் போட வைப்பதே படத்தின் திரைக்கதை.
படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு சென்சார்க்கு அனுப்பினோம், படத்தை பார்த்த சென்சார் குழுவினர் யூ சான்றிதழ் வழங்க மறுத்து விட்டனர்.
படதில் கல்லூரி மாணவர்கள் தாங்கள் எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்று ஆசிரியரிடம் சொன்னதற்கும் எதிர்காலத்தில் அவர்கள் அதை செய்ய முடியாமல் போவது போல் காட்சி வரும். அப்போது பூ விற்கும் ஒருவர் தாமரை தாமரை என்று கூவி விற்பது போன்ற காட்சி இருக்கிறது. அந்த காட்சியை கண்டிப்பாக நீக்க வேண்டும் என்று சொன்னதோடு இல்லாமல் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளும் வசனங்களும் இருப்பதாக கூறி இந்த படம் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று “A” சர்டிபிகேட் வழங்கியுள்ளனர். இதை கேட்ட நாங்கள் அதிர்ச்சிக்ககு உள்ளாகினோம். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது என்கிறார் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன்.