‘சிட்டிசன்’, ‘ஏ பி சி டி’போன்ற படு சுமாரான படங்களைக் கொடுத்த சரவண சுப்பையா சுமார் 16 ஆண்டுகால வனவாசத்துக்குப் பின் மீண்டும் இயக்கியிருக்கும் படம் ‘மீண்டும்’.

மீண்டும் படத்தில் கதிரவன் ஜோடியாக அனகா நடித்திருக்கிறார். இவர் டிக்கிலோனா, நட்பே துணை படங்களில் நடித்தவர். பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன், அபிதா செட்டி, யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணியம் சிவா, தர்ஷினி, இந்துமதி, மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்ஷ், மோனிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர், கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதி உள்ளார். நரேன் பாலகுமாரன் இசை அமைத்திருக்கிறார். சீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது எடிட்டிங் செய்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சி அளித்திருக்கிறார்.

படத்தின் கதாநாயகி அனகாவுக்கு இரண்டு கணவர்கள், ஒரு பெண் குழந்தை என்ற விநோதமான கதைக் கருவைக்கொண்டு அவர் இயக்கியிருக்கும் இப்படத்தில் மிக ’நீலமான’ ஒரு நிர்வாணக்காட்சி இடம் பெறுகிறதாம். டெம்ப்ட் ஆகி டிக்கெட் ரிசர்வ் பண்னக் கிளம்பவேண்டாம். அப்படி நிர்வாணமாக நடித்திருப்பவர் கதாநாயகன் கதிரவன். இந்தக் காட்சிக்காக உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் ஆறு நாட்கள் அம்மணமாக நடித்துக்கொடுத்தாராம் கதிரவன்.

படத்தின் தயாரிப்பாளரும் இவரே. பொதுவாக படம் முடிந்த பிறகுதான் இயக்குநர்கள் தயாரிப்பாளர்களின் டவுசரை கழட்டி அம்மணமாக்குவார்கள். நம்ம சரவண சுப்பையாதான் எதையும் வித்தியாசமாக செய்பவராயிற்றே. படத்தின் பாதியிலேயே தயாரிப்பாளரை அம்மணமாக்கிவிட்டார்.

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.