பாசிசம் என்ற சொல்லை நாம் அடிக்கடி கேள்விப்பட்டு இருப்போம். அப்படி என்றால் என்னவென்று தெரியுமா?
ரோமர்கள் காலத்தில் இத்தாலியை ஆட்சி செய்தவர் சர்வாதிகாரி சிஞ்சினாட்டஸ் (Cincinnatus). அவர் சட்டத்தை நிலைநாட்ட கையாண்ட ஆயுதம் கோடாரி. கோடாரிக்கு லத்தீனில் பாசெஸ் (FASCES) என்று பெயர். இந்த பாசெஸ் தான் “பாசிசம்” என்ற சொல் உருவாக காரணம். முசோலினி தனது கட்சிக்கு பாசிசக்கட்சி என்றே பெயர் வைத்தார்.
பாசிசத்தின் கோட்பாடானது ஒரு போலியான தேசிய உணர்வை ஊட்டி மக்களை ஒன்று திரட்டுவதும், பிற தேசிய இனம் அல்லது சமூக மக்களின் மீது வெறுப்பை வளர்த்து அவர்களை இரக்கமின்றி அழிப்பதே ஆகும். இந்த அழிவுகள் வளர வளர பாசிச அரசும் வலு பெறும்.
தனிமனித உரிமைகளை மதிக்காமல், நாட்டு நலனுக்காக, வளர்ச்சிக்காக எனக்கூறி அரசை கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மூலம் நசுக்கும் அரசியல் முறையே பாசிசம் எனப்படும்.
ரோமர்கள் காலத்தில் இத்தாலியர்கள் உலகையே ஆண்டார்கள். லத்தீனே மூத்த மொழி. பிற மொழிகள் அதிலிருந்தே உருவானது. அத்தகைய இத்தாலிய இனம் மீண்டும் எழ வேண்டும் என்ற சிஞ்சினாத்தியின் கருத்தே முசோலினியின் கருத்தாகவும் இருந்தது. இதுவே இத்தாலி மக்களுக்கு வெறியூட்டும் பிரச்சாரமாக பரப்பப்பட்டது.
இதன்படியே ஜெர்மனியில் ஹிட்லர், ஸ்பெயினில் பிரெடரிக் ப்ராங்கோவும் செயல்பட்டனர். ஈரானின் ஷா மக்கள் ஆட்சியை நிறுவுவேன் என்று கூறியே தனக்கு முடிசூட்டு விழாவை நடத்திக் கொண்டார்.
இந்திய விடுதலையின் போது வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தில் மத உணர்வும் கிளப்பி விடப்பட்டது. இதன் பிண்ணனியில் இருந்தவர்கள் அனைவரும் மத ஆதிக்கவாதிகள்.
இந்தியா பன்முகத்தன்மை கொண்டது. இங்கு பல்வேறு மொழி, கலாச்சாரம், சமயம், வழிபாட்டு பண்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் பிரிட்டிஷ் விட்டு சென்ற இந்தியா முழுவதும் தங்கள் ஆதிக்கத்தை நிறுவிட ஆரிய இந்துத்துவாவாதிகள் தங்கள் மொழி, மத வழிபாட்டை இந்தியா முழுவதும் வலிந்து திணிக்கும் நுட்பமான ஏற்பாடுகளை திட்டமிட்டு தற்போது வரை செய்து வருகின்றனர். இது பாசிசம் வளர்வதற்கான ஒரு அடையாளமாகும்.
ஒரே .. ஒரே Y என்கிற பெரும் தேசபக்திக் கதையாடல்களும் பாசிசத்தின் அடையாளங்கலாகும். தனி மனிதனை கண்ணை மூடிக் கொண்டு துதிப்பதும், அவர் சொல்வதை வேதவாக்காக ஏற்று நடப்பதும் பாசிசம் வளர்வதால் ஏற்படும். இந்தியாவில் மத ரீதியிலான பாசிசம் உருப்பெற்று வருகிறது.
பாசிசத்தின் கூறுகளை கண்டறிந்து அதை களைய வேண்டும். பாசிசத்தை எளிய மக்களின் விழுப்புணர்வின் மூலம் மட்டுமே வீழ்த்த முடியும். அந்த பணியை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகளே வரலாற்றில் நிலைத்திருக்கும்.
இதுவே உலக வரலாறு!!
–வாட்ஸப் பகிர்வு.